பக்கம்:புதையலும் பேழையும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 221

- இக்காட்சியைப் புலவர்கள் காலந்தோறும் கண்டு பாடியுள்ளனர். அவர்களது கூற்று எழுத்திற்கெழுத்து பொருந்தி வரும் உண்மைப்பொருள் கொண்டது என்பதை இக்காட்சி முத்திரையிட்டுக் காட்டியது. -

காட்சியும் இலக்கிய ஆட்சியும், இப்பொருத்தத்தை ஆழ்ந்து காணவும் இலக்கியங்கள் இ.ந்தருகின்றன:

வெண்முகிலிலிருந்து மடிக்காம்பு முளைத்து அது விழுதாகி ஊன்றியதைக் கால் ஊன்றியதாக இலக்கியங்கள் பேசுகின்றன: 'ஆர்கலி யாணர்த் தரீஇய கால்வீழ்த்துக் கடல்வயின் குழிஇய அண்ணலங் கொண்மூ' -என்று பெருந்தலைச் சாத்தனார் பாடியுள்ளார். இதற்கு உரை கண்ட பழைய உரைகாரர்,

'கால் வீழ்த்துக் கடலிடத்தே திரண்ட தலைமையை யுடைய முகில்’

-என விளக்கினார்.

பெருஞ்சித்திரனார் பாடல் அடிகளில் குறிக்கப்படும் 'கால் ஊன்றிய கருத்தை ஊன்றி நோக்க வேண்டும்.

இப்பாடல் கடிய நெடுவேட்டுவன்மேல் பாடப்பட்டது.

"அவனை அடையும் பரிசிலர் கூட்டம் தேரோடு மருப்பேந்திய யானையையும் பரிசாகப் பெறாமல் மீளாது!-என்பதைக் கூற

எழுந்தது இப்பாடல்.

'பரிசிலர் பரிசை உறுதியாகப் பெற்றே மீள்வர்; பெறாமல் மீளார்'- என்பதை விளக்குவதற்கு உவமையாகவே முகில் கால் இறக்கிய கருத்து இப்பாடலில் வைக்கப்பட்டுள்ளது, அதனைக் கூறும்,

... . . ... ... ... ...அண்ணலங் கொண்மூ நீர்இன்று பெயரா ஆங்கு”

1. புறம் 205 : 10 11 2 புறம் : 205 :11, 12.