பக்கம்:புதையலும் பேழையும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#,

பேழையும் 281

இவ்வியப்பு எவ்வாறு நேர்ந்தது? இவ்வகையில் வின எழ எவ்வகை நிகழ்ந்தது? - - -

கோவிலும் வழிபாடும்.

மிகத் தொன்மை நாளில் இறைவனுக்குக் கோவில் இல்லை. இயற்கை மரத்தின் அடியிடமே இறைவன் அமரும் இடமாக இருந் தது. ஆலமரத்தின் கீழ் இருந்து அரன் ஐயம் தீர்த்தான். அரச மரத்தின் அடியில் அமர்ந்து புத்தன் அறம் கண்டான். அசோக மரத்தின் அரும் நிழலில் அருகன் அறம் உரைத்தான். இவற்றின் குறிப்பாகவே மக்கள் மரத்தின் கீழ் இறைவனை அமர்த்தி வழிப் பட்டனர். இதன் அறிகுறியாக இன்றும் ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு மரம் திருமரமாக உள்ளது.

காலப்போக்கில் இறைவன் உருவைத் துய்மையாகப் பேண விரும்பிச் சிறு குடில்களாக சிறு இல்லங்களாக அமைத்தனர். இறைவனாம் கேர்’ அமரும் இல் - கோவில்’ ஆகியது. படிப் படியாகக் கதைகள் பிறந்தன; கரணங்கள்தோன்றின; புராணங்கள் எழுந்தன. ஆயினும், மக்கள் தாமே நீரும் பூவும் கொண்டு சென்று இறைவனை வழிபட்டனர். பூ, நீரோடு, படைக்கும் அமுதாம் பலிப் பொருளும் இணைந்தது. இறையன்பர் தாமே இறைவனை நீராட் டினர். மலர்களை இறைவன் திருவடியில் குவியலாகப் படைத்தனர். படைப்புப் பொருள்களையும் திரு முன் வைத்தனர். தம் குறை சொல்லியும், குறையற்ற இறைவனின் நிறைகுணம் பேசியும் போற்றினர். தம் உள்ளத்து உணர்வைத் தம் வாயால் - வாய் மொழியாம் தாய்மொழியால் வெளியிட்டு ஏற்றினர். மலரை இரு கைநிறைய ஏந்திக் குவியலாகப் படைக்கும் வழிபாடே தமிழர்தம் வழிபாடாக இருந்தது. - | --

மலர்ப் படைப்பையும் ஏற்றுதலையும் இ ைண த் து ஒவ்வொரு போற்றுதலுக்கு ஒவ்வொரு மலராக இடும் பழக்கத்தை உண்டாக்கினர் பிறர். இஃதே அருச்சனை எனலாயிற்று. அருச்சனை என்ற வடமொழிச் சொல்லே இம்முறை வடமொழி யாளரால் ஏற்படுத்தப் பட்டது என அடையாளம் கூறி நிற்கின்றது. . - இந்நிலையில் தமிழில் மந்திரம் சொல்லி வழிபடுவதற்குத்

துணையாகப் போற்றிகள் உருவாயின. . .