பக்கம்:புதையலும் பேழையும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 . புை தயலும்

பல்லவர் ஆட்சி தமிழகத்தில் தலையெடுத்த போது வட மொழிக்கும் வடமொழியாளர்க்கும் ஏற்றம் கிடைத்தது. பல்லவ மன்னர் வடமொழியைப் போற்றி வளர்க்க இயலுவன யாவும் செய்தனர். வடமொழியாளரை மிக மதித்து வந்தனைசெய்தனர். பல்லவர்களது பேராதரவோடு இறைவனது திருக்கோவில்களில் வடமொழி ஒன்றே ஆட்சி பெறும் நிலை வேரூன்றியது. வடமொழி ஒன்றே தெய்வமொழி-தேவபாட்ை என்னும் கருத்து நிலைத்தது

வடமொழி ஆட்சி இறைவனது அணுக்கத்தில் திகழ்ந்தது ஆயினும், கோவிலில் தமிழுக்கும் இடமிருந்தது. கருவறையில் அன்று; அதற்கு இப்பாற்பட்ட எல்லையில் இடம் ஒதுக்கப் பட்டது. (தமிழ் ஒதுக்கப்பட்டது) இறைவனின் திருவிழாவில் வடமொழியே இறைவனுக்கு அணுக்கமாய் ஒலித்தது. தமிழ் ஒரு கோடியில் இசைத்தது.

இந்நிலையில்தான் நாம் இறைவழிபாட்டிற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைக் காண வேண்டியவர்கள் ஆகின்றோம். இறைவனுக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள இயைபு என்ன? தமிழ்ச் சான்றோர் இறைவன் தொடர்பில் தமிழுக்கு எத்தகுதி யைக் கண்டனர்? சமயத் துறையினர் கொண்ட தமிழ் உள்ளப் பாங்கு எத்தகையது? இவ்வினாக்களின் விடைகளில்தான் தமிழ் வழிபாட்டு முறை இயற்கையாகவே வலுப்பெறுகின்றது.

தமிழின் தகுதி

'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' -என்று பிங்கல நிகண்டு (3610) தமிழுக்குப் பொருள் கூறு கின்றது. தமிழ் இனிமை என்னும் பொருள் உடையது. நீர்மை என்ற பொருளால் நீரின் தன்மையாகிய தண்மையைக் (குளிரை கொண்டது. - - . . . . . . . . . . . .

மாணிக்கவாசகரும், 'தண்ணார் தமிழ்' என்றார். என்னும் சொல் பல பொருள்களைக் கொண்டது. அப் பொருள்களில் தமிழோடு இயைந்து பொருந்தும் பொருள்களில் இயல்பு என்னும் பொருளும் ஒன்று. இப்பொருளால் தமிழ்

1 திருவர் : #೮೩ಹಿdra s : 10 : 3,