பக்கம்:புதையலும் பேழையும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ខ្ញុំ புதையலும்

இச்சொற்களில் தாய் என்னும் சொல் ஒன்றே உலக வழக்கில், பேசப்படுகின்றது. அஃதும் உரையாடல்களில் 'தாய் சொல்லைத் தட்டாதே என்பது போன்று பெரும்பான்மையும் மேற்ே றிப்பில்தான் பேசப்படுகின்றது. உன் தாய் எங்கே, ன்ன்'தாயிடம் சோறு கேள்' என நடைமுறைப் போக்கில் தாய்' என்னும் சொல்லும் வழங்கப்படுவதில்லை. இரவலர்கள் தாயே, பிச்சை போடுங்க தாயே என்று ஈன்றவள் என்னும் பொருட் குறிப்பில் அல்லாமல் கூறுவர். ஈன்றவளைக் குறிக்கும் பிற சொற் கள்ே உலக வழக்கில்-நடைமுறைப் பேச்சு வழக்கில் இல்லை

அம்மா என்னும் சொல்லோ பெயர்ப் பொருளிலேயே பரந்துபட்ட பெருவழக்காய்க் காலந்தோறும் நாள்தோறும், நேரந்தோறும், இல்லந்தோறும் நிறைந்து உலவுகின்றது. மேலும் இச்சொல் பெண் பால் விகுதி ஒன்றான ளகர (ள்) இறுதி பெற்று 'அம்மாள்' என்று தாயைக் குறிக்கும் சொல்லாகவும் நிற்கின்றது. 'கண்ணம்மாள்', 'பொன்னம்மாள்' எனப் பெண் டிரைக் குறிக்கும் சொல்லாகவும் நிற்கின்றது. 'அம்மாள்” என்பதே ‘அம்பாள் எனத் திரிந்து வடமொழியில் இறைவியைக் குறிக்கின்றது. "வடமொழி யில் அம்பா' என்ற சொல் 'அம்மா’ என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே' எனத் தமிழ்ப் பேரறிஞர் கா. சு. பிள்ளையவர்கள் குறித் துள்ளார்கள். மொழியியற் பேரறிஞர் பாவாணர் அவர்களும்,

அம்மை (அம்ம) என்பதின் திரிபே அம் ம ன், அம்பா (வ) என்பவை'

-எனக் காட்டினார்கள்

இவ்வளவு பரந்துபட்ட பெருவழக்காற்றுச் சொல்லாம் அம்மா தனக்குரிய இடத்தை இலக்கியத்திலும் நிகண்டிலும் -ஏன்-பெரும் பான்மையான அகர முதலிகளிலும் பெயர்ப் பொருளில் பெறவில்லை. சீவக சிந்தாமணியில் 'கோ அம்மாவாகி’ என்னும் தொடரில் அரசனுக்குத் தாயாகி எனப் பொருள் படும். நிலையில் உள்ளது. அவ்விடத்து, செய்யுளின் ஆற்றொழுக்கு நோக்கி நச்சினார்க்கினியர் என்னும் அதன் உரையாசிரியர் 'அம் + மா -அழகிய திரு" என்று உரை வகுத்தார்.

பெயர்ப் பொருள்

1. ஒப்பியன் மொழி நூல் : 204,