பக்கம்:புதையலும் பேழையும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 47.

| இகழ்வார்ப் பொறுத்தல் தலை" (151); மாணா செய் யாமை தலை’ (317); நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (322) என மேலும் மூன்றிடங்களில் தலை இப்பொருளோடு அமைந்துள்ளது.)

இச் சிறந்த அறம்' என்னும் பொருட் தலை-மேம்பாடு டன்மையின் தொடர்போடு, மற்றொரு பொருளில் அடுத்துவரும் குறளில்

தலை அமைந்துள்ளது:

"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை” (47) -இக்குறளில் தலை, வாழ்பவன்' என்னும் சொல்லோடு இயை ன்றமையால் மேம்பட்டவன்’ என்னும் பொருளைத் தருகின்றது. மேற்குறித்தபடி தலைக்கு அமைந்த சிறப்பிற்கும், உறுப்புகளில் மேம்பட்டு உயர்ந்து மேலே விளங்கும் நிலைக்கும் ஏற்ப, ஆண் பாற் சொல்லோடு தொடர்ந்து மேம்பட்டவன்’ என்னும் பொருள் கிளைக்கிறது.

(இப்பொருளோடு தலை வரும் இடங்கள் "தானம்

செய்வாரின் தலை' (?95); 'கொல்லாமை சூழ்வான் தலை" (325); "எண்ணி உரைப்பான் தலை” (687),

மேம்பட்டவன்’ என்னும் தன் பொருட்கிளையால் ஆண் மகனை உயர்த்திக் காட்டிய தலை, பெண் குலத்தை உயர்த்தி மேம்படுத்த அடுத்தொரு:குறளில் அமைந்துள்ளது:

'சிறைகாக்குங் காப்பெவன் செய்யும்; மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை' (57) -இக்குறளில் தலை’ என்னுஞ் சொல் சிறந்தது' என்னும் பொருள் தந்து நிற்கின்றது, தலை மேம்பட்ட உறுப்பாய் உயர்ந்து, சிறந்து நிற்பதற்கேற்ப இப்பொருளை இங்கும் தந்து நிற்கின்றது. - -

(இப்பொருளில் தலை அமைந்த இடங்கள்: 'அறிவினுள் எல்லாம் தலை' (203); செல்வத்துள் எல்லாம் தலை' (411);