பக்கம்:புத்த ஞாயிறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 புத்த ஞாயிறு:

எள்ளும் சமயம் தத்துவம் யாவுமே உள்ளவை அல்ல வென்று ரைத்திடுவீர் கொள்ளை கொள்ளை இன்பமிவ்வுலகம் கூடுதல்-பிரிதல் யாவும் மகிழ்ச்சி வெள்ளி மதுக்கிளர் விழியாளே உன் தன் உள்ள மறிவதே வேதங்கள் உடலுணர்வதே இன்பங்கள்-துன்பம் ஏதுமில்லே-இவ்வுலகில்(இருவர் குரலும்) கண்டதே காட்சி-கொண்டதே கோலம்

தத்துவம் யாவும் செத்தவை ஆகும். (குரல் மெல்ல மெல்லத் தொலைவில் சென்று நலிகிறது)

மு. பிட்சு : கேட்டீர்களா அடிகளே? கண்டதே காட்சி, கொண்டதே கோலமாம். தத்துவங்கள் எல்லாம் செத்தவை ஆகுமாம்.

இ. பிட்சு : பாவம்! பாவம்! என் செவிகளைப் புத்தர் பெருமான் மன்னிக்கட்டும். 'கள்ளும் களவும் கொள் ளும் சுகமே-இன்றும் நாளையும் என்றும் சாசுவத’’ மென்று பேசுகிருனே பாவி?

மு. பிட்சு : கவலைப்படாதீர் அடிகளே! புத்த ஞாயிறு. தோன்றும் காலத்தில் உலகில் இப்படிப்பட்ட பாவங் கள் எல்லாம் அழியும். எங்கும் கருணையின் பொலிவும், கனிவும், திகழும். அதுவரை நமக்குப் பொறுமையும் அமைதியும் வேண்டும் அடிகளே! பொறுமையும் சகிப் புத் தன்மையும்தான் துக்க நிவாரணத்தை உண்டாக்க முடியும் என்ற நமது சமயத்தத்துவத்தை அதற்குள் மறந்துவிட்டீர்களா, என்ன?

இ. பிட்சு : ஒருபோதும் இல்லே! ஆல்ை இந்தக் களிமகன் என் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு விட்டான். இவர்க ளெல்லாம் வாழ்வில் திருந்த வேண்டுமே, இப்படிக் கீழாயிருக்கிருர்களே' என்ற கருணையின் அடிப்படையில் தான் என் உணர்வே இப்போது இங்கு கிளர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/14&oldid=597377" இலிருந்து மீள்விக்கப்பட்டது