பக்கம்:புத்த ஞாயிறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 15

இளைஞன். இதோ கேட்கிறேன் ஐயா! ஏதோ புத்த ஞாயிறு என்று கூறினர்களே, அது என்ன...... ? அந்த ஞாயிறு தோன்றும் காலத்தில் உலகில் என்னென்ன

நன்மைகள் நிகழும்......? மக்கள் அதனல் என்னென்ன பயன்களை அடைவார்கள்? சற்று விளக்கமாகத்தான் கூறுங்களேன்!'"

பு. பிட்சு உன் போன்ற இளைஞர்கள் இத்தகைய கேள்வி களைக் கேட்பதற்குக் கோபம் காரணமில்லை. அறியர்மை தான் காரணமென்று நினைக்கிறேன். புத்த ஞாயிறு தோன்றும் காலத்தில் கதிரவனும், சந்திரனும், தீங் கின்றி விளங்குவார்கள். நாளும் கோளும், நலிவின்றி நல்லனவாய் நிகழும். வானம் பொய்யாது. வளங்கள் குறையாது. உலகத்து உயிர்கள் துன்பமின்றி இன்பமே நுகரும். வளம் நிறைந்த மலைகளும், காடுகளும் வளம் சுரக்கும். பொருள் வளம் பெருகும். பசுக்கள் நலம் மிகுந்து நிறையப் பால் பொழியும். உலகத்தில் நோய் களே இல்லாமற் போய்விடும். கொடிய விலங்குகளும் தம்முள் பகைநீங்கி வாழும். கூனும், குருடும், ஊம்ை யும், செவிடும் போன்ற அங்க ஈனர்களை எங்குமே கான முடியாதபடி உலகமே முற்றிலும் இன்பமாக மாறி விடும். - - - : ث இளைஞன் மதிப்பிற்குரிய பிட்சுவே! உலகில் இப்படி மாறு: தல்கள் எல்லாம் நிகழும் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது? அதை நான் எப்படி நம்புவது? எப்படிப்

புரிந்துகொள்வது? - பிட்சு: உன்னல் நம்ப முடியவில்லையானல் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? உன்னை நம்பவைக்கும் முயற். சியை மட்டுமே நான் செய்ய முடியும். அடியோடு உன்னை மாற்றுவதற்கு என்னல் முடியாது. உன் மனம் மாற அறிவுத்தெளிவு ஒன்றே துணைசெய்யும். - இளைஞன்: மெய்தான்! என்னை உங்களால் மாற்ற முடி

யாது. ஆனல் உங்களை என்னல் மாற்ற முடியும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/17&oldid=597380" இலிருந்து மீள்விக்கப்பட்டது