பக்கம்:புத்த ஞாயிறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா.பார்த்தசாரதி 4}.

(கணிகையின் குரல் தளர்ந்து கிணற்றிலிருந்து ஒலிப்பது போல் ஒலிக்கிறது.)

கணிகை: (திகைப்புற்ற குரலில்) சுவாமி! என்னைத் தங்க ளுக்கு நினைவிருக்கிறதா? இந்த நகரத்துக் கணிகையர் வீதி மருங்கில் நீண்ட காலத்திற்கு முன்பு என் நடனத்தைப் பார்க்க வருமாறு உங்களே நான் வழிமறித் தேனே, நினைவிருக்கிறதா?

பிட்சு : நன்முக நினைவிருக்கிறது. ஆனல் நீதான் இப்போது அடையாளம் தெரியாதபடி உருச்சிதைந்து இப்படி இந்தப் பயங்கர நோய்க்கு ஆளாகிவிட்டாய்! அன்று நீ பெருமைப்பட்டுச் செருக்கிய அந்த உடலின் கவர்ச்சி இன்று எங்கே போயிற்று? அன்று பாடிய குயிலினு. 'மினிய குரலை இன்று எங்கே பறிகொடுத்தாய்? அன்று வேல் போல் கயல்மீன் போல் மாவடுப் போல் மின்னிய உன்கருவிழிகள் ஏன் இன்று.இப்படி இரத்தப்புண்களாகி விட்டன? எதற்காக இங்கே கூடியிருக்கும் ஒவ்வொரு வரும் உன்னைத்தொட அஞ்சி அருவருப்பு அடைகிருர் கள்? பொன்னையும் பொருளையும் அளித்துக் கண்னே: மணியே! என்று அன்று உன்னைத் தேடிவந்து கொஞ்சி யவர்கள் இன்று ஏன் தொடவும் அஞ்சுகிருர்கள்? உலகை இப்போதாவது புரிந்து கொண்டாயா...?

(பதில் கூருமல் அவள் விம்மி விம்மி அழும் ஒலி)

கணிகை : (அழுகைக்கிடையே) இந்தப் பாவியை மன்னிப் பீர்களா சுவாமீ...? அன்று ஆணவத்தால் உங்களிடம் ஏதேதோ பேசிவிட்டேன். ஒரு காலத்தில் என்னிடம் இருந்த அழகும், குரலினிமையும் எனக்கே உரியனவை களாக என்றும் என்னிடமே இருக்கும் என்றுஇறுமாந்து செம்மாந்திருந்தேன். 'சொந்தம் கொண்டாடுவதற்குக் காரணமான ஆணவம்தான் உன்னுடையது, மற்றவை எல்லாம் இறைவனுடையவை' என்பதை அன்றே நீங்கள் எனக்கு விளக்கமாக எடுத்துக் கூறினீர்கள். பு -3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/43&oldid=597406" இலிருந்து மீள்விக்கப்பட்டது