பக்கம்:புத்த ஞாயிறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 புத்த ஞாயிறு

தேடவுமே முயன்றேன். இந்த நோயாளிக்குப் பணி விடை செய்து காப்பாற்றுவதில் உள்ள இன்பம் யாத்திரையில் இருக்குமென்று இன்று எனக்குத் தோன்றவில்லை. முதியவ : பாராட்டுகிறேன்! இந்த வாக்கியமும், உணர் - வும் உங்களுக்கே உண்டாக வேண்டுமென்றுதான் இவ்வளவு காலம் உங்களைப் போகவிடாமல் நான் தடுத்தேன். நம்முடைய இதயமே மணிபல்லவம். அதில் சுரக்கும் கருணையே கோமுகி. உண்மையான புத்து ஞாயிறு எங்கே உதிக்கிறது தெரியுமா? ஒவ்வொரு பிட்சுவின் மனத்திலும் ஞானே தயம் உண்டாகிக் கருணை சுரக்கும்போதுதான் அங்கே புத்த ஞாயிறு உதிக் கிறது. இந்த உண்மை புரிந்து விட்டால் ஒரு கவலையு மில்லை. நீங்கள் இப்போது புரிந்து கொண்டுவிட்டீர் கள். உங்கள் மனத்தில் புத்த ஞாயிறு உதித்துவிட்டது. உங்களுக்கு என் வாழ்த்துக்கள். இனி நீங்கள் எந்த இடத்தையும் தேடி யாத்திரை போகவேண்டிய அவசியமே இல்லை. ஒரு நல்ல பிட்சுவின் மனத்தில் துக்க நிவாரண மார்க்கம் தென்படும்போதே புத்த ஞாயிறு உதித்து விடுகிறது. அந்த ஞாயிறு உதித்த பின் இருள் இல்லை. துன்பம் இல்லை. பிணி இல்லை. பசி இல்லை. மூப்பு இல்லை. எந்த வேதனையும் இல்லை. பிட்சு : அடிகளே! என்னை இவ்வளவு காலம் சோதனை செய்த உங்களுக்குத்தான் நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். நீங்கள் சோதனை செய்ததனால்தான். இந்த ஞானம் எனக்குக் கிடைத்தது. நான் வேண்டிய உடனேயே மறுக்காமல் நீங்கள் என்னை மணிபல்லவத் திற்கு அனுப்பி வைத்திருப்பீர்களானல் எனக்கு இந்த அநுபவ ஞானே தயம் ஏற்பட்டிருக்காது. இத்தனை ஆண்டுகள் நீங்கள் என்னைச் சோதனை செய்தீர்கள். அதன் காரணமாகவே இந்த உணர்வை நான் அடைந் தேன். மனத்தில் பெருகும் கருணையே புத்த ஞாயிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/48&oldid=597411" இலிருந்து மீள்விக்கப்பட்டது