பக்கம்:புத்த ஞாயிறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கோதையின் காதல்

கோதை : என்னுடைய தவம் வீண்போகவில்லை. இப்படி நீங்கள் சொல்வது என் பூர்வ புண்ணிய வசத்தால், நான் பெறும் பாக்கியம். (குனிந்து மணவாளனின் பாதங்களைக் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்கிருள்) இருவரும் மெல்ல நடந்து, சத்திரத்தை அடைகிருர் கள். கதவைத்தட்ட, மணியக்காரர் அந்த அகாலத்தில் உறக்கம் சோர்ந்த விழிகளோடு வந்து கதவைத் திறக் கிருர். மணவாளனயும் கோதையையும் சேர்த்துப் பார்த்துத் திகைக்கிரு.ர்.

மணியக்காரர்: என்ன ஐயா இது? அரண்மனை வித்துவானுக இருந்து பாளையத்து இளவரசிக்குச் சங்கீதம் கற்பிப்ப தாக ஊரெல்லாம் உன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கிருர்கள். நீ என்னடாவென்ருல் கழைக் கூத்திப் பெண்ணுேடு இரவில் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிருப்? (கண்களில் நீர் தளும்பச் சற்றே நிமிர்ந்து மணவாள னைப் பார்க்கிருள் கோதை. அவனே சுட்டுவிடுகிற, மாதிரி மணியக்காரரைப் பார்க்கிருன்)

கோதை : (மெல்லிய குரலில்), நீங்கள் என்மேல் கொள் கிற அன்பையும் ஆதரவையும் உலகம் எப்படி வரவேற் கிறது பார்த்தீர்களா?

மணவாளன் : ஐயா! மணியக்காரரே! உங்கள் நாச்சியார் புரத்து அரண்மனையில் யானையையும் குதிரையையும் வளர்க்கிறமாதிரி சங்கீதத்தையும் வளர்த்துவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சத்திரம் தருமசாலை என்று நினைப்பதால்தான் உங்களிடம் இப்போது வந்து தங்குவதற்கு இடம் கேட்கிருேம். பாளையத்து அதிகாரத்துக்குப் பணியாதவர்களைத் தங்க விட மாட்டீர்களானல், தெருவில் எங்காவது மரத்தடி யில் படுத்து உறங்கிக் கொள்கிருேம். நான் அரண் மனையிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி வந்து விட்டேன்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/68&oldid=597433" இலிருந்து மீள்விக்கப்பட்டது