பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 101 என்ன செய்வது என்பதை அறியாமல் நிரம்பவும் தத்தளித்தாள். அவள் அப்புறம் இப்புறம் சிறிதும் நகரமாட்டாமல் இரும்புப் பிடியாக அந்த வளையங்கள் அவளை நாற்காலியோடு நாற்காலியாகச்சேர்த்துப் பிடித்துக் கொண்டிருந்தது. ஆனாலும், அந்த வளையங்கள் பஞ்சினாலும் மிருதுவான வெல்வெட்டுத் துணியினாலும் அழகாக மூடப்பட்டிருந்தமையால் அவளது மேனியில் எவ்வித காயமாவது, வலியாவது உண்டாகாமல் இருந்தது. அவள் நுட்ப புத்தியும் சமயோசித தந்திர ஞானமும் எவரையும் எளிதில் வெல் லக்கூடிய வாக்கு வன்மையும் பூரணமாகப் பெற்றிருந்தவள். ஆதலால், அந்த நளினசுந்தரி தனது வெட்கத்தையும் அவமானத்தையும் தவிப்பையும் அதிகமாக வெளியில் காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டாள்; எதிர்பாரா வகையில் தனக்கு நேர்ந்த அந்தத் துன்பத்தைப் பற்றித் தான் சிறிதும் வருந்தாதவள் போலவும், அதைச் சிறிதும் இலட்சியம் செய்யாதவள் போலவும், அவர் அவ்வாறு வஞ்சகம் புரிந்ததைப் பற்றி அவள் அவர் மீது சிறிதும் கோபம் பாராட்டாதவள் போலவும் தோன்றி, அப்போதே மலர்ந்த தாமரைப் புஷ்பம் போலத் தனது சுந்தரமுகத்தைப் புன்னகையால் மலர்த்தி மகா வசீகரமான பார்வையாக அந்தக் கிழவரை உற்றுநோக்கி தேனோ, பாகோ, தேவாமிருதமோ வென்னத்தக்க அதிக மாதுரியமான குரலால் நிரம் பவும் பணிவாகவும் நயமாகவும் பேசத் தொடங்கி, "மகாப் பிரபுவே, தாங்கள் செய்த இந்த மகாக் கொடுமையான காரியம் தருமமாகுமா? இந்த ஊரிலுள்ள மகாராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்திலுள்ள செல்வச் சீமானின்மேல் விருப்பம் கொண்டு, தன்னிடமுள்ள சகலமான இன்பத்தையும் சுகத்தையும் கொடுக்கும் எண்ணத்தோடு தானாகத் தேடிவந்த அபலையான ஒரு பேதைப் பெண்ணை இப்படிப்பட்ட தண்டனைக்கு ஆளாக்குவது தங்களுடைய கண்ணியத்துக்கும் நீதிக்கும் அடுத்ததாகுமா? வெள்ளிக்கிழமையாகிய இன்றையதினம் தங்களுடைய முறையல்லவா? என்னை வெல்லுவதற்காக