பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 157 கெட்டிக்காரனாட்டமா இருக்குது. அவனைப் பார்க்க ஆசை உண்டாகுது. அன்றைக்கு இரவிலே, எம்பிட்டு ரூபா அம்பிட்டுது? உனக்கு ஏதாச்சும் குடுத்தானா?” என்றேன். கந்தன், 'அன்றைக்கு நான் போக முடியலை. என்னென்ன கொள்ளையடிச்சாங்கறது எனக்குத் தெரியலை. ஆனா எனக்கு நூறு ரூபா பணம் வந்துச்சு' என்றான். நான், "ஓ! சந்தோசம்.அது போதாதா? அந்த மாதிரி ஒவ்வொரு கொள்ளைக்கும் அம்பிட்டாப் போதுமானது. அதிருக்கட்டும். மாரியம்மன் கோயில்லே யாரோ பெரிய மனிசரு ராசாமகன் கிட்டே என்னமோ எழுதி வாங்கினான்னு சொன்னியே! என்ன எழுதி வாங்கினாவ?’ என்றேன். கந்தன், 'அந்தச் சங்கதி எனக்கு நல்லாத் தெரியாது. அந்தப் பெரிய மணிசரும் அவரோடெ பெஞ்சாதியும் என்னத்துக்காகவோ பயந்து அந்த ஊருலெ ஒளிஞ்சிக்கிட்டிருக்கிறாளாம். அதுக்காக ராசாமவன் கிட்டே ஒரு கடுதாசி மேலே இன்னொரு கடுதாசியை ஒட்டி, மேலே இருந்த கடுதாசியிலே ஒரு சங்கதியை எழுதினார்களாம்; கீழே இருந்த கடுதாசியிலே வேறே என்னமோ முக்கியமான சங்கதியை எழுதிக் கிட்டாங்களாம். மேலே இருந்த கடுதாசி சின்னதாம்.அது அடிக்கடுதாசிக்கு முக்கால் பங்கு இருக்குமாம். அடிப்பக்கத்துலே அவுரு கையெழுத்துப் போட்டு முத்திரை வச்சாராம். அப்படி வச்சது கீழே இருந்த கடுதாசி மேலேயாம். ராசாமவனுக்கு அது தெரியலியாம்; ஏமாத்திப்புட்டாங்களாம்" என்றான். அதைக் கேட்ட நான் அதற்கு மேலும் அந்த விஷயத்தைப்பற்றிக் கிளறிக் கிளறிக்கேட்கக் கூடாது என்று அவ்வளவோடு நிறுத்தி வேறே சங்கதிகளைப் பற்றிப் பேசத் தொடங்கினேன் என்றார். அதுவரையும் மிகுந்த வியப்போடும் பொறுமையோடும் கேட்டு வந்த மருங்காபுரி ஜெமீந்தார், “என்ன ஆச்சரியம்! நம்முடைய கூத்தாடி அன்னத்தின் வீட்டில் இருக்கும் கந்தன் பார்ப்பதற்கு மகாயோக்கியன் போல இருக்கிறானே!