பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பூர்ணசந்திரோதயம்-2 யுற்றேன். இனி என்ன செய்கிறது என்பது தெரியவில்லை. அதுதான் கவலையாக இருக்கிறது. அவள் இருந்திருப்பாள் ஆனால், இன்று ராத்திரி இரண்டாயிரம் ரூபாய் அவளுடைய கைக்கு வந்து சேர்ந்திருக்கும். அவளும் பதிவிரதைத்தனம் கொண்டாடி அந்தத் தொகையை ஏற்றுக் கொள்ளாதிருக்க மாட்டாள். மாசிலாமணிப் பிள்ளை:- நீ சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு யாராவது இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பார்களா? ஒருவேளை இருநூறு ரூபாயாக இருக்குமோ? - ஹேமாபாயி:- இல்லை இல்லை. இரண்டாயிரந்தான். அது மாத்திரமா? எனக்குப் பிரத்தியேகமாக இருநூறு ரூபாயாவது கொடுப்பார். அதெல்லாம் சரி; அப்படிப்பட்ட பெண் அல்லவா வேண்டும். அதற்குத்தான் என்ன செய்வது என்பது தெரியவில்லை. மாசிலாமணிப் பிள்ளை:- நீ சொல்வது நம் பக்கூடாத விஷயமாக இருக்கிறது. ஒரு பெண்ணினிடம் ஒரு ராத்திரியில் அவ்வளவு பெரிய தொகையை எடுத்து எறிய, அவன் என்ன அவ்வளவு முட்டாளாகவா இருப்பான்? ஹேமாபாயி: - அவர் ஒரு கோடீசுவரர் அல்லவா? அவருக்கு இந்த இரண்டாயிரம் ரூபாய் இரண்டாயிரம் ஒட்டாஞ் சில்லுகளுக்குச் சமானம். அவர் கலியானமே செய்து கொள்ளவில்லை. தம்முடைய ஆயிசுகாலமெல்லாம் இப்படி சிற்றின்பம் அனுபவித்தே போக்கி வருகிறார். சித்தம் போக்கு சிவன்போக்கு என்கிறபடி, அவர் மனசுக்கு இஷ டமானால், ஆயிரமல்ல, பதினாயிரமல்ல வாரி ஒரு நொடியில் வீசிக் கனகாபிஷேகம் செய்துவிடுவார். அதைப் பற்றிச் சந்தேகமே வேண்டாம். மாசிலாமணிப் பிள்ளை:- நீ சொல்வது வாஸ்தவமாக