பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 229 நேரத்திற்குப் பிறகு மாரியம்மன் கோயில் என்ற ஊரின் செட்டித் தெருவில் மாசிலாமணிப் பிள்ளை வசித்துக்கொண்டிருந்த பங்களாவின் வாசற் கதவை யாரோ தடதடவென்று இடித்த ஒசையைக் கேட்டு பங்களாவிற்குள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த வேலைக்காரர்களும் மாசிலாமணிப்பிள்ளையும் அவரது அழகிய மனைவியும் திடுக்கிட்டு விழித்துக் கொண்டார்கள். தனியாக அமைந்த ஒரு சயனக் கிரகத்தில் இருந்த மாசிலாமணிப் பிள்ளை விவரிக்க இயலாத திகில் கொண்டவராய்த் தமது மனைவியை நோக்கி, ‘என்ன ஆச்சரியம்! இந்த அகாலவேளையில் வேறே யார் வந்து இப்படிக் கதவை இடிக்கப் போகிறார்கள் சரி, கடைசியில், போலீசார்தான் என்னைக் கைது செய்து பிடித்துக் கொண்டு போவதற்காக வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் எங்கேயாவது ஒளிந்துகொள்ளுகிறேன். அவர்கள் வந்து விசாரித்தால், நான் ஊரில் இல்லை என்று சொல்லிவிடு. கதவைத் திறப்பதற்குள் வேலைக்காரர்களை எச்சரித்துவிடு' என்று கூறிய வண்ணம் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த அழுக்குத் துணி மூட்டையைப் பிரித்து அதற்குள் சுருட்டி முடக்கிக் கொண்டு ஒடுங்கி உட்கார்ந்து மூடிக்கொள்ள எத்தனித்தார். அவரது அச்சத்தையும் கலக்கத்தையும் கண்டு நடுநடுங்கி நின்ற அவரது யெளவன மனைவி, "ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்? போலீசார் வந்தால் வரட்டுமே. நமக்கென்ன பயம். நம்மிடத்தில்தான் அந்த தஸ்தாவேஜி இருக்கிறதே. அதைக் காட்டினால், அவர்கள் அதைப் பார்த்து விட்டுப் பேசாமல் போப் விடுகிறார்கள். அதைப் பற்றிக் கவலைப் படுவதேன்?" என்று மறுமொழி கூறி அவரைத் தேற்ற முயன்றாள். - அவளது சொற்களைக் கேட்ட மாசிலாமணிப் பிள்ளை, 'நம்மிடத்தில்அந்த தஸ்தாவேஜி இருந்தால் என்ன. போலீசார் அதைப் பார்த்து எனக்கு எவ்வித அனுகூலமும் செய்ய