பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பூர்ணசந்திரோதயம்-2 கவனிக்காமல் அவனே இவ்வாறு கடிதம் எழுதி இருந்தது அவளைக் கரைகாணாத் துக்க சாகரத்தில் ஆழ்த்திவிட்டது. யாரோ ஒர் அநாதைப் பெண்ணைக் கண்டு, அவளைத் தனது வீட்டில் தனது சவரக்ஷணையில் வைத்துக் கொள்ளப் போவதாக அவன் எழுதியிருந்தது, அவளது மனதில் மிகுந்த ஆச்சரியத்தையும் பலவகையான சந்தேகங்களையும் உண்டாக்கியது. அவனது மனம் சபலித்து ஒரு வேளை அந்தப் பெண்ணின் மீது திரும்பி இருக்குமோ என்றும், அதனால் அவன் கலியானத்தை நிறுத்திவிட எண்ணியிருப்பானோ என்றும் அந்த அணங்கு பலவாறு எண்ணமிட்டு உருகினாள். இருந்தாலும், அவள் கபடமற்ற நற் குணமுடையவள் ஆதலாலும், கலியாணசுந்தரம் மகா பரிசுத்தமான உத்தம புருஷன் என்ற நினைவை அவள் உறுதியாக வைத்திருந்தவள் ஆதலால், அவன் தனக்கு எவ்வித துரோகமும் நினைக்க மாட்டான் என்ற எண்ணமும் இடையிடையில் தோன்றியது. ஆகையால், அந்தப் பேடன்னம் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பலவகையான நினைவுகளினால் உலப்பப்பட்டவளாய் அதே கவலை கொண்டு தன்னையும் உலகையும் அடியோடு மறந்து பைத்தியம் பிடித்தவள் போல அன்றைய பொழுதைப் போக்கினாள். அதற்கு முந்திய தினங்களில், கடிதமாவது வேறு எவ்விதச் செய்தியாவது கிடைக்காமையால் வருந்தியதைவிட, அன்றைய தினம் கடிதத்தைப் பார்த்து அதிலிருந்த சங்கதிகளைத் தெரிந்து கொண்டதால் பதினாயிரமடங்கு அதிகரித்த வேதனை அடைந்து வருந்தினாள். அன்றைய பொழுது கழிவது நரகவேதனையாக இருந்தது. அந்தக் கடிதத்தினால் தனக்கு எவ்விதத் தீங்கும் உண்டாகாது என்ற துணிவு ஷண்முக வடிவினது மனதில் தானாகவே உண்டாகிக் கொண்டிருந்தது அன்றி, அவளது வேலைக்காரியும், கலியாணசுந்தரம் தனது வாக்குறுதியை மீறக்கூடியவன் அல்ல என்று தைரிய வார்த்தை கூறித் தேற்றிக் கொண்டிருந்தாள்.