பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 305 அதைக் கேட்ட கலியாணசுந்தரம் தானும் பூனா தேசத்துக்கே போவதாகவும் அவ்விடத்தில் அவசரமான ஒரு வியாபார நிமித்தம் தான் அங்கே போவதாகவும், ஆனால் இடைவழியி லுள்ள கோலாப் பூரில் முக்கியமான சில காரியங்களை முடித்துக்கொண்டு போகவேண்டும் என்றும் மறுமொழி கூறினான். அந்த வரலாற்றைக் கேட்கவே தங்களது சகாப் பிரயாணியான அந்த மன்மத புருஷனும் தங்களோடுகூட பூனா தேசம் வரையில் வரப்போகிறான் என்பதைக் கேட்ட, அந்த யெளவன மங்கையரினது கண்கள் சந்தோஷத்தில் மலர்ந்து ஜ்வலித்தன. உடனே முத்துலக மியம்மாள் மறுபடியும் பேசத் தொடங்கி அவன் கோலாப்பூரில் எத்தனை நாளைக்கு இருக்க வேண்டி வருமென்று வினவினாள். அவன் கோலாப்பூரில் தனது அலுவல் இரண்டு நாட்களில் முடிந்துபோய் விடுமென்று மறுமொழி கூறினான். அதைக்கேட்ட அம்மாளு நிரம்பவும் சந்தோஷம் அடைந்த வளாய், “என்ன ஆச்சரியம்! நாங்களும் கோலாப்பூரில் இரண்டே நாள்தான் இருந்துபோக வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு ஒத்தாற் போல நீங்களும் இரண்டே நாள் இருக்கப் போவதாகச் சொல்லுகிறீர்களே! உங்களுக்கு ஜோசியம் தெரியும் போலிருக்கிறதே!' என்று குதுகலமாகப் பேசினாள். அவள் சொன்ன சங்கதி தனது கருத்துக்கு நிரம்பவும் அனுகூலமாக இருந்ததைக் கண்டு அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த கலியாண சுந்தரம், 'அப்படியானால் கோலாப்பூருக்கு அப்பாலும் நான் உங்களோடு கூடவே வரும்படியான சந்தர்ப்பமும் இன்பமும் சந்தோஷமும் கிடைக்கும் போலிருக்கிறது” என்ற நயமாகக் கூறினான். அதைக் கேட்ட பெண்கள் மூவரும் அளவற்ற மகிழ்ச்சியும் குதூகலமும் அடைந்து தங்களது நன்றியறிதலையும் ஆழ்ந்த விசுவாசத்தையும் தங்களது முகத்தோற்றத்திலேயே