பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 315 ஒன்றாகக்கூடி மறுபடியும் பிரயாணத்துக்கு ஆயத்தமான காலத்தில், அந்தப் பெண்கள் இருவரும் கலியாணசுந்தரத்தைப் பார்த்தபோது, சிறிதும் கிலேசமாவது நாணமாவது கொள்ள வில்லை. அவர்களது தோற்றமும் நடத்தையும் எப்போதும் போலவே இருந்தன. ஆனால், அதற்குமுன் அவனிடம் காட்டியதைவிட நூறுமடங்கு அதிகரித்த வாஞ்சையும் நேசமும் பாராட்டத் தொடங்கினரே அன்றி, முதல் நாளிரவில் தாங்கள் வெளிப்படுத்திய தங்களது கருத்துக்கு அவன் இணங்கி வராமல் தங்களை விலக்கி விட்டானே என்றதனால் அவமான மாவது இழிவாவது அடைந்தவராகத் தோன்றவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் மறுபடியும் பெட்டிவண்டியில் உட்கார்ந்து பிரயாணம் செய்யத் தொடங்கினர். முதல் நாளில் உட்கார்ந்திருந்ததைப் போலவே முத்துலக மியும் மூன்றாவது பெண்ணான அபிராமியும் பின்பக்கத்து ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டனர். முன்பக்கத்து ஆசனத்தில் கலியாணசுந்தரம் நடுவிலும், தனம் அம்மாளும், அம்மாளு அம்மாளும் அவனுக்கு இருபுறங்களிலுமாக உட்கார்ந்து கொண்டனர். வண்டி சிறிது தூரம் போகுமுன் கலியாணசுந்தரம் பேச ஆரம்பித்து, பூனாவில் இருக்கும் லலிதகுமாரி தேவியின் இல்லற வாழ்க்கையைப் பற்றிய சங்கதிகளைப் பற்றி சம்பாவிக்கத் தொடங்கினான். அந்த இளவரசியின் உத்தம குணங்களைப் பற்றியும், இளவரசர் எவ்வித முகாந்திரமும் இன்றி அந்தப்பெண்ணரசியினிடம் வர்மம் பாராட்டி அவளை விஷமென வெறுத்து வருவதைப் பற்றியும் நிரம் பவும் அனுதாபமாகவும் இரக்கமாகவும் மொழிந்ததன்றி, அவர்கள் இருவரும் மறுபடியும் ஒன்றாகக் கூடி அன்னியோன்னிய மாக வாழுங்காலம் எப்போது வருமோ என்று நிரம்பவும் உருக்கமாகக் கூறினான். ஆனால், அன்னத்தம்மாளினது பெண்கள் மூவரும் அந்த விஷயத்தில் நிரம்பவும் ஜாக்கிரதையாகவும் சுருக்கமாகவும் மறுமொழி கூறி