பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 61 வேண்டுமாம். நான் உபசரித்து உள்ளே வந்து தாகத்திற்குச் சாப்பிட்டுப் போகும்படி அவர்களை அழைத்தேன். அவர்கள் இன்னொரு சமயத்தில் வந்து நீங்கள் அந்த முரடர்களிடத்தில் அகப்பட்டுக்கொண்ட வரலாற்றைக் கேட்டுக்கொள்வதாகச் சொல்லிவிட்டு உடனே வண்டியை ஒட்டிக்கொண்டு. போய் விட்டார்கள். நான்கதவைப் பூட்டிக் கொண்டுவந்துவிட்டேன்” என்றாள். அந்த விவரத்தைக் கேட்ட எந்தெழில் மடந்தையான ஷண்முகவடிவினது முகம் வாட்டமடைந்தது. அதிருப்தியும் விசனமும் முகத்தில் தாண்டவமாடின. 'அடாடா என்ன என்னுடைய மூடத்தனம்! இவ்வளவுதூரம் நமக்கு உதவி செய்த மனிதர் உள்ளேயும் வருவார் என்றல்லவா நினைத்து நான் முன்னே வந்து விட்டேன். அவர் உடனே போகவேண்டும் என்றதைக் கேட் டவுடனே அந்த விஷயத்தை என்னிடம் தெரிவித்துவிட்டு வருவதாகச் சொல்லி, அவரை ஒரு நிமிஷ நேரம் நிற்கச் செய்துவிட்டு என்னிடம் ஓடிவரக் கூடாதா? அப்படி வந்திருந்தால் நானே நேரில் போய்த் தக்கபடி மரியாதை செய்து அந்த ஐயாவை அழைத்து வந்திருப்பேனே! நீ கதவைத் திறந்தவுடன் நானும் அங்கே நின்று அவரையும் அழைத்து வராமல் முதலில் உள்ளே வந்ததை அவர் தவறாக நினைத்துக் கொண்டிருப்பாரோ? என்னுடைய மானத்தையும், உயிரையும் காப்பாற்றிய உயிர் தெய்வமாகிய அந்த மகா உத்தம புருஷரை, என் வேலை முடிந்தவுடன், நான் அசட்டை செய்ததாக நினைத்துக்கொண்டு அதிருப்தி அடைந்து, உள்ளே வர மனமற்று உடனே போய்விட்டாரோ, என்னவோ தெரியவில்லையே! ஆகா! என்ன காரியம் செய்து விட்டோம்! நானும் முட்டாள்தனம் செய்து விட்டேன். நீயும் அஜாக்கிரதையாக இருந்து ஏமாறிப் போனாய். நம்மை ஒரு பொருட்டாக மதித்து, நம்முடைய உபசார வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள அவர் இனிமேல் எங்கே வரப்போகிறார். அவர் இனி இங்கே வருவார் என்று சொல்வதற்கு ஏதுவில்லை.