பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 77 போவதற்குள் என்னுடைய சிநேகிதனுடைய கதி எப்படி ஆகுமோ என்ற யோசனை தோன்றியது. சாவகாசமாக மறுபடியும் இன்றைய தினம் உங்களிடம் வந்து உங்களுடைய வரலாறுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று நினைத்தே நான் உடனே புறப்பட்டுப் போய்விட்டேன். அப்படிப் போனதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இவ்வளவு பெரிய பங்களாவில் இருக்கும் நீ ஆண் துணையோடும், தக்க ஆள் மாகாணங்க ளோடும் இருப்பாய்; ஆகையால், உன்னுடைய மனிதர்கள் உன்னை அதற்குமேல் பாதுகாத்துக் கொள்வார்களென்று நினைத்தே நான் போனேன். நீ இப்படித் தனியாக இருக்கிறாய் என்பதைப் பற்றி நான் கொஞ்சமும் சந்தேகிக்கக்கூட இல்லை. இருந்தாலும், என் மனசில் ஒரு சந்தேகம் மாத்திரம் இருந்தது. அவ்வளவு தூரம் துணிந்து அக்கிரமம் செய்த அந்த மனிதர்கள் ஒருவேளைதக்க ஆள்பலத்தோடு மறுபடியும் நேற்று ராத்திரி இந்த பங்களாவுக்குள் வந்து ஏதேனும் கலகம் செய்வார்களோ என்று நான் கொஞ்சம் கவலை கொண்டுதான் இருந்தேன். அதற்காக நான் என்ன செய்தேன் தெரியுமா? இந்த பங்களாவுக்குப் பக்கத்தில் ஒரு பள்ளத் தெரு இருக்கிறது. நான் வண்டியை ஒட்டிக்கொண்டு நேராக அங்கே போய், பத்து ஆள்களை அமர்த்தி நேற்று ராத்திரி முழுதும் அவர்கள் கையும் தடியுமாக இந்த பங்களாவைச் சுற்றிலும் காவல் காத்திருக்க வேண்டும் என்று சொல்லி அமர்த்தி அவர்களை அனுப்பி விட்டுப் போனேன். பொழுது விடிகிற வரையில் அவர்கள் இங்கே இருந்து காத்துக் கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்' என்றான். அந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த அழகிய மடமங்கை கரை கடந்த மன எழுச்சியும், நன்றியறிதலின் பெருக்கும் அடைந்தவளாய், 'அடாடா தங்களுடைய ஆப்தமித்திரர் மகா அபாயமான நிலைமையில் இருக்கும்போது அதைக் கூடக் கவனியாமல் எங்களைப் பாதுகாப்பதற்கு தாங்கள்