பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 - பூர்ணசந்திரோதயம்-2 என்பது நான் நினைக்க ஏதுவில்லாது இருப்பதால் இனி நம்முடைய குடும்பப் பொறுப்பை அடியோடு நீயே ஏற்றுக்கொள்வது அத்யாவசியமாக இருக்கிறது. ஆகையால், நீ உன்னுடைய கலியானத்தைச் சீக்கிரம் நிறைவேற்றிக் கொள்வதோடு, அத்தையைக் கடைசி வரையில் சவரriப்பது முதலிய சகலமான காரியங்களும் இனி உன்னைச் சேர்ந்த பொறுப்பாகவே நீ மதிக்க வேண்டும். இந்தக் கடிதம் கிடைத்தவுடனே நீ முத்தம்மாளோடு கலந்து யோசனை செய்து சகலமான விஷயங்களையும் உன் பிரியப்படி நடத்திக்கொள். கலியாணத்துக்கு முகூர்த்த நாள் குறித்து அந்தச் செய்தியை எனக்குத் தெரிவி. உனக்கு ஈசுவரன் சர்வாபீஷ்டமும் தீர்க்க சுமங்கலீயமும் அருளுவாராக. -என்று கமலம் எழுதியிருந்த கடிதத்தைப் படிக்க ஷண்முக வடிவின் மனதில் சகிக்கவொண்ணாத மனவெழுச்சியும், இன்பவெள்ளமும் பொங்கிக் கரைபுரண்டோடின. எதிர்பாராத ஒரு பெருத்த மண்டலேசுவரனது பட்டத்து ராணியின்ஸ்தானமே தனக்குக் கிடைத்தவிட்டதுபோல எண்ணிக்கொண்ட அந்தப் பெண்ணரசி தன் மனதில் கொந்தளித்து எழுந்த தேவாமிர்த ஊற்றின் இனிமையைத் தாங்கமாட்டாமல் பேச்சு மூச்சற்று அப்படியே மயங்கிப் பக்கத்திலிருந்த கம்பத்தில் சாய்ந்து விட்டாள். முதன்முதலாக அந்தப் பேடன்னம் கலியாணசுந்தரம் என்று பெயர்கொண்ட அந்த மோகனாங்கனைப் பார்த்த காலத்திலிருந்து, இன்னதென்று விவரிக்க முடியாத ஒருவிதப் பற்றும் பிரேமையும் அவனது விஷயத்தில் உண்டாகி, நாளுக்கு நாள் வளர்ந்து வந்தன. தனக்கு மானபங்கமும், பிரர்ண ஹானியும் நேராமல் காப்பாற்றியதன்றி அதன் பிறகும் எத்தனையோ வகைகளில் அவன் தனக்குக் கைம்மாறு கருதாத பேருதவி புரிந்து வந்ததைக் காணக் காண, அவன் விஷயத்தில் அவளது மனதில் அபாரமான பிரியமும், வாத்சல் யமும் சுரந்து கொண்டே வந்தன. அதோடு, அவனது உயர்வான