பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பூர்ணசந்திரோதயம் - 5 இன்ஸ்பெக்டர் இந்த விஷயங்களை எல்லாம் நியாயாதிபதிக்கு அறிவித்து விசாரணை நடத்தவேண்டுமென்று பிரியப் பட்டாலும், நான் அதற்கு இணங்குகிறேன். இதனால் எனக்கு எப்படிப்பட்ட தண்டனையாவது கெடுதலாவது நேர்ந்தாலும், நான் அவைகளை நிரம்பவும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளத் தடையில்லை” என்று உறுதியாகவும் முடிவாகவும் கூறினாள்.

அதைக்கேட்ட நீலமேகம் பிள்ளை, ‘அம்மா! நீங்கள் வேறு, என் சொந்தத் தாய் வேறென்று நான் எண்ணவில்லை. ஆகையால், அப்படிப்பட்ட அவமானமும் கெடுதலும் உங்களுக்கு நேருவதை நான் பார்த்துச் சகிக்கமாட்டேன். அதுவுமன்றி, ஒர் அன்னியருடைய சம்சாரத்தைக் கெடுத்தாரென்ற கெட்ட பெயர் என் தகப்பனாருக்கு வராதா? அப்படிப்பட்ட இழிவு ஏற்படும்படி நானே செய்யலாமா? நீங்கள் சொன்னதெல்லாம் உண்மையென்று நான் நம்புவதாக நான் ஏற்கெனவே உறுதி சொல் லிவிட்டேன். நான் என் தகப் பனார் விஷயத்தில் செய்யவேண்டிய ஒரு கடமையாக பாவித்து நான் வேறே இரண்டு வைத்தியர்களை வைத்துக் கொண்டு என் தகப்பனாருடைய சவத்தை ரகசியமாக வெளிப்படுத்திப் பரீட்சை செய்து ஒருவிதமாகத் திருப்தி செய்துகொள்ள உத்தேசிக்கிறேன். அதுவே போதுமானது. அப்படி நாம் செய்துவிட்டால், அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்ட ரிடம் என்னால் இயன்றவரையில் சிபாரிசு செய்கிறேன். அவர் சகலமான நற்குணங்களும் வாய்ந்த மனிதர்; அவர் என்னுடைய சொல்லை மீற மாட்டார். ஆகையால், இந்த விஷயம் நியாய ஸ்தலத்துக்குப் போகுமோ என்ற கவலையே உங்களுக்கு வேண்டியதில்லை” என்று உறுதியாகக் கூறினார்.

உடனே லீலாவதி “சரி; அப்படியே செய்யலாம். இன்ஸ்பெக்டரிடம் இப்போதே போகலாமா? நானும் உங்களுடன் கூடவே வருகிறேன்” என்றாள்.

நீலமேகம்பிள்ளை, ‘அப்படியே செய்யலாம். ஆனால்,