பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 27 குதித்தது. அவள், “ஐயோ! அம்மா என் உடம்பு முழுதும் நெருப்பினால் வெந்து போய்ப் பச்சைப் புண்ணாக இருக்கிறது. என் பிராணன் வெகுசீக்கிரத்தில் போய்விடும்போல இருக்கி றது. நீங்கள் என்னுடைய உடம்பைத் தொட்டால், கொஞ்ச நேரத்துக்குப் பிறகு போகும் பிராணன் இப்போதே போய் விடும்’ என்று நிரம்பவும் பரிதாபகரமான மெல்லிய குரலில் கூறினாள். அவள் பேசிய குரலோசை கிணற்றுக்குள்ளி ருந்து பேசும் குரலொலிபோல் நிரம் பவும் தணிவாகவும் பலஹீனமாகவும் இருந்தது.

அவளது சொற்களைக்கேட்ட ஹேமாபாயியும் வேலைக்காரி யும் ஷண்முகவடிவின் கால் கைகள் உடம்பு முதலியவற்றை நன்றாக உற்று நோக்கினார்கள். நெருப்புச் சுட்டதனால், ஆங்காங்கு கொப்புளங்கள் கிளம்பியும் தோல் வழுவுண்டும் இருந்தது நன்றாகத் தெரிந்தது. அவ்வாறு நெருப்பினால் சுடப்பட்டிருந்த அந்த யெளவன ஸ்திரீயைப் பாய்க்குள் வைத்துக் கட்டி யார் போட்டிருப்பார்கள் என்பதையும் அவர்கள் அவ்வாறு கட்டிப் போட வேண்டிய காரணமென்ன என்பதையும், அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் அவர்களது மனதில் எழுந்து வதைத்தது. ஆனாலும் அவளை அவ்விடத்தில் வைத்துக் கொண்டு பேசுவது உசிதமல்லவென்று நினைத்த ஹேமாபாயி, ‘அடி! இந்தப் பெண்ணின் உடம்பு முழுதும் கொப்புளித்தும் வழுவுண்டும் இருக்கிறதைப் பார்த்தாயா? இவளைப் பாயில் வைத்துக் கட்டி இங்கே கொண்டுவந்து போட்ட மனிதர்களே இவளை நெருப்பினால் சுட்டிருக்க வேண்டுமென்று நினைக்கி றேன். தற்செயலாக இவளுக்கு நெருப்பினால் அபாயம் நேர்ந்திருந்தால், இப்படிப்பட்ட பரிதாபகரமான நிலைமையில் இவளை வைத்துக் காப்பாற்றியிருப்பார்கள். அப்படிச் செய்யாமல் இவளைப் பாயில் வைத்துக் கட்டிக் கொண்டு வந்து போட்டதை

கவத்தால், அவர்களே நெருப்பினால் சுட்டிருக்கிறார்கள்

பூ.ச.V-9