பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 135

நான்காம் நாள் பொழுது விடிந்தது. அவளது நிலைமையில் நற்குறிகள் காணப்பட்டன. அன்றைய தினம் காலையில் வந்து அவளது நிலைமையை ஆராய்ந்து பார்த்த வைத்தியர் திருப்தியும் சந்தோஷமும் அடைந்தவராய் ஹேமாபாயியை நோக்கி, ‘அம்மா இனி நான் தைரியமாகச் சொல்லலாம். இந்தப் பெண் இனி பிழைத்துக் கொள்வாள். இந்த மூன்று நாளும்தான் பெருத்த கண்டம். முதல் நாள் நான் பார்த்த காலத்தில் இந்தப் பெண்ணின் உள் கருவிகளெல்லாம் வெந்து கொத கொதவென்று போயிருந்தன. அப்போது அவைகள் அப்படியே ஒய்ந்து தத்தம் வேலையைச் செய்யாமல் நின்று போய்விடக்கூடிய நிலைமையில் இருந்தன. அவைகள் ஆறி சொஸ்தப் படக்கூடிய நிலைமையிலேயே அவைகள் இருக்க வில்லை. ஆனால், அதே நிலைமையில் அவைகள் இருந்து இந்த மூன்று தினங்களும் தத்தளித்துச் சமாளித்துக்கொண்டு ஆறத் தொடங்கி இருக்கின்றன. இனி அவைகள் அபாயத்தில் திரும்புமென்ற பயமே இல்லை. இனிமேல் அவைகள் படிப்படி யாக ஆறிக்கொண்டே வரும். ஆனால், நீங்கள் இனிமேல்தான் நிரம் பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்தக் கருவிகளுக்கு அதிக உழைப்பு இல்லாதிருக்கும்பொருட்டு இந்த அம்மாள் தன் மனசையாவது உடம்பையாவது அலட்டிக் கொள்ளாமல் எப்போதும் ஒய்வாகப் படுத்து சந்தோஷமான மனதோடு இருக்கவேண்டும். மோர் பச்சைத் தண்ணிர் முதலியவற்றைச் சேர்த்தால் ஒருவேளை உட்புறக் கருவிகளில் நீர்க்கோவை ஏற்பட்டு புண்களில் சீழ் உண்டாகும். ஆகையால், அவைகளை விலக்கி பத்தியமான சாத்விக ஆகாரம் கொடுத்து வரவேண்டும். இதுவரையில் பிரயோகிக்கப்பட்ட மருந்து களையும் காலம் தவறாமல் பிரயோகித்து வரவேண்டும்” என்று கூறினார்.

ஷண்முகவடிவு பிழைத்துக்கொள்வாளென்ற நல்ல செய்தியைக் கேட்டவுடனே, ஹேமாபாயியின் மனதில் மிகுந்த