பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பூர்ணசந்திரோதயம் - 5 தையும் சுட்டிக்காட்டி, ஜெமீந்தார் இறந்த தினத்தன்று அவ்விடத்தில் நடந்த சம்பவத்தை எல்லாம் தெளிவாக எடுத்துரைத்தாள். அவ்வாறு அவ்விடத்தில் அவர்கள் ஒரு நாழிகை சாவகாசம் இருந்து சகலமான விஷயங்களையும் திருப்திகரமாகத் தெரிந்துகொண்டு அவ்விடத்தை விட்டுக்கீழே இறங்கி, கூலியாட்கள் வெட்டிக்கொண்டிருந்த இடத்திற்கு மறுபடி வந்து சேர்ந்தனர். -

லீலாவதி சிறிது துரத்திற்கு அப்பாலிருந்த ஒரு மேடையின் மீது உட்கார்ந்துகொண்டு அவ்விடத்தில் நடந்த ஆராய்ச்சியின் முடிவை அறிய ஆவல்கொண்டவளாக இருந்தாள். மற்றவர்கள் எல்லோரும், குழியைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வெந்நீர் அண்டா இருந்த இடத்தைப் பார்த்துவிட்டு வந்ததற்குள் கூலியாட்கள், வெகுதுரம் குழிவெட்டி விட்டார்கள். அதற்குமேல் தாங்கள் முரட்டுத்தனமாக வெட்டினால் தங்களது ஆயுதங்கள் சவத்தின் மேல் படுமென்று நினைத்து அவர்கள் நிரம் பவும் ஜாக்கிரதையாக வெட்டிக் கொண்டே போய்ச் சிறிது நேரத்தில் சவமிருந்த இடத்தை அடைந்தனர். அவர்கள் சவத்தைக் கெட்டியான ஒரு துப்பட்டியில் சுற்றி அடக்கம் செய்திருந்தனர். ஆதலால் மண் துப்பட்டி முழுமையும் அறித்துத் தின்று, சவத்தையும் அறித்துத் தின்ன அப்போதே ஆரம்பித்திருந்தது. பட்டு நூலேணி ஒன்றும் அவ்விடத்தில் இருந்தது. லீலாவதி விவரித்ததுபோல, அவ் விடத்தில் எல்லாக் குறிப்புகளும் இருந்ததை இன்ஸ்பெக்டர் முதலியோர்நன்றாக உணர்ந்தனர். சவத்தை அவ்விடத்திலிருந்து வெளியில் எடுக்க அவர்கள் முயற்சிக்க அது அழுகித் தண்ணீராய்ப் போகும் நிலைமையில் இருந்தது. ஆகையால், அவர்கள் கொண்டு வந்திருந்த சில துப்பட்டிகளைப் போட்டுச் சுற்றியே அதை அவர்கள் வெளியில் எடுக்கும்படி நேர்ந்தது.

கூலியாட்கள் அவ்வாறு சவத்தை வெளிப்படுத்தி எடுத்துக்கொண்டு போய்க் கட்டிடத்துத் தாழ்வாரத்தில்