பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 137 சிரேஷ்டமானதாகவும் அதிக மரியாதை வணக்கம் பயபக்தி முதலியவற்றோடும் பாராட்டத் தொடங்கினாள்.

முன் கூறப்பட்டபடி நான்காம் நாள் காலையில் வைத்தியர் அவளுக்குரிய பத்தியம் முதலிய நிர்ணயங்களைச் சொல்லி அவள் தனது உடம்பையும் மனதையும் அலட்டிக்கொள்ளாமல் இருக்கவேண்டுமென்று சொன்னபோது ஷண்முகவடிவு தனது வாயைத் திறந்து மெதுவாகப் பேசத் தொடங்கி, ‘இந்தப் புண்களெல்லாம் ஆறி நான் பழைய நிலைமைக்கு வர இன்னும் எத்தனை நாள் பிடிக்கும்?’ என்றாள்.

உடனே வைத்தியர், ‘ஏன் கேட்கிறாய்? உனக்கு நிரம்பவும் அவரசம்போலிருக்கிறது. குயவனுக்குப் பலநாளைய வேலை; தடியடிகாரனுக்கு ஒருகூடினவேலை. அதுபோல நன்றாக இருந்த உடம்பில் நெருப்பை வைத்து ஒரு rணத்தில் கொளுத்திக் கொண்டாய். ரணங்களை ஆற்றி உடம்பைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வருவதென்றால், அது லேசான காரியமா? உன்னுடைய அவசரத்துக்காக அது பயப்படுமா? எவ்வளவு காலம் ஆனாலும் அதுவரையில் நீ பொறுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். நான் சொன்னபடி எல்லா விஷயத்திலும் நீ நிரம் பவும் ஜாக்கிரதையாக இருந்தால் சீக்கிரத்தில் செளக்கியம் ஏற்பட்டுவிடும்” என்றார். அதைக் கேட்ட ஷண்முகவடிவு நிரம்பவும் வெட்கமடைந்தவளாய்த் தனது கண்களை மூடிக்கொண்டு மெளனம் சாதித்தாள்.

அதன்பிறகு வைத்தியர் ஹேமாபாயினிடம் செலவு பெற்றுக் கொண்டு வீட்டிற்குப் போய்விட்டார். அவர்கூறிய கூர்மையான சொற்கள் ஷண்முகவடிவின் மனதில் பசுமரத்தாணிபோல நன்றாகப் பதிந்துவிட்டன. ஆதலால், அவள் எடுப்பார் கைக் குழந்தைபோல மாறிப்போய், ஆகாரம் சாப்பிடுதல், மருந்து உண்ணுதல், ஒய்வு எடுத்துக்கொள்ளுதல் முதலிய சகலமான விஷயங்களிலும் ஹேமாபாயின் சொல்லை மீறாமல் ஜாக்கிரதையாக நடந்து வந்தாள். நாட்கள் கழிந்து கொண்டே