பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பூர்ணசந்திரோதயம் - 5 ஏதோ வார்த்தைகள் கூற ஆரம்பித்தாள். அப்போது அவளது கண்களில் கண்ணிர்த் துளிகள் ததும்பி நின்றன. அவளது முகம்

கலங்கியது. - x

அதைக் கண்ட ஹேமாபாயி நிரம்பவும் வாஞ்சையாகவும் குழைவாகவும் பேசத் தொடங்கி, “ஏனம்மா! நீ இப்படி விசனப்படுகிறாய்? இந்த உலகத்தில் நீ ஒருத்திதானாதுன்பமும் துயரமும் அனுபவிக்கிறவள். இந்த ராஜ்யத்தைப் பரிபாலிக்கும் மகாராஜன் முதல் சந்திசந்தியாய்த் திரியும் கேவலம் பிச்சைக் காரன் வரையிலுள்ள சகலமான மனிதரும் ஏதோ ஒரு விதமான துயரமும் கவலையும் கொண்டு சதாகாலமும் சஞ்சலப் பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். துன்பங்கள் ஒருவர் பாக்கி யில்லாமல் எல்லோருக்கும் நேருகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் போய் ஒவ்வொரு மனிதரிடமும் பேசிப் பார்த்தால் அவரவர்கள் சொல்லும் வரலாறு பாரத கதை போல இருக்கும். இன்று சந்தோஷமாக இருக்கிறவர்கள் நாளைய தினம் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக மாறுகிறார்கள். இன்று அழுது ஏங்கி இருப்பவர்கள் நாளைய தினம் குது.ாகலமாக இருக்கிறார்கள். மனிதருடைய நிலைமை ஒரு கட்டுப்பாட்டில் அடங்கியதே அல்ல. மனிதன் இன்று செயலற்ற கைக்குழந்தை, கொஞ்சகாலத்தில் ஒடுகிற பாலகன், மேலும் சொற்ப காலத்தில் உற்சாகமும் குதூகலமும் நிறைந்த யெளவனப் புருஷன், பிறகு சொற்ப காலத்தில் கவலைகளும் உழைப்பும் சகலமான குடும்பப் பொறுப்பும் நிறைந்த திட புருஷன், பிறகு சில ஆண்டுகளில் சகலமும் தளர்ந்த உபயோக மற்ற கிழவன், பிறகு கொஞ்ச காலத்தில் அவன் கேவலம் ஒரு பிடி சாம்பலாக மாறி மண்ணோடு மண்ணாக மறைந்து போகிறான்.அல்லவா. ஒருவர் போல எல்லோரும் இவ்விதமான பரிதாபகரமான ஒரேவித முடிவை அடையக் கூடியவர்களாய் இருக்க, ஒருவர் உயர்வு மற்றவர் தாழ்வு என்ற பேச்சே இல்லை. மனிதனுக்கு இந்த உடம்பு இருக்கிற வரையில் அதனால் ஏற்படக்கூடிய