பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 143

உடனே ஹேமாபாயி, “அம்மா! நீயோ அறியாத சிறிய பெண் னாக இருக்கிறாய்; உன்னைப் பார்த்தால், தக்க பெரிய இடத்துப் பெண் என்ற நினைவு உண்டாகிறது. நீ உன்னை அநாதை என்று சொல்லிக் கொள்ளுகிறாய். உன்னுடைய முழு வரலாற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசையும் ஆவலும் பல நாளாக என் மனசிலிருந்து வருத்தி வந்தன. ஆனாலும், வைத்தியருடைய சொல்லை மீறி நடந்தால் அதனால் உன்னுடைய தேக நிலைமையில் கெடுதல் ஏற்படுமென்று பயந்து நான் இதுவரையில் பொறுத்துக் கொண்டிருந்தேன். நீ மேன் மேலும் உன் விஷயங்களைக் குறித்துக் குறித்துப் பேசுவதைக் கேட்க, இனி உன் வரலாற்றை அறிந்து கொள்ளலாமென்ற எண்ணமும் ஆசையும் உண்டாகின்றன. ஆகையால், நீ உன்விருத்தாந்தங்களை என்னிடம் சொல்லலாம். ஆனால் அதை நான்கேட்டு, உனக்கு என்னால் ஏதாவது உதவி தேவையானால் அதைச் செய்து உன் துயரத்தை விலக்கத் தடையில்லை. நான் ஏகாங்கி; எனக்கு ஆண் பெண் முதலிய சந்ததி எதுவும் இல்லை. என் புருஷர் ஏராளமான சொத்துக் களைத் தேடி வைத்துவிட்டு இறந்துபோய்விட்டார். இந்த மாளிகைக்கும் பெருத்த செல்வத்துக்கும் நானே எஜமானியாக இருந்து வருகிறேன். உனக்கு எவ்வளவு பெரிய உதவி தேவையானாலும், நான் சுயேச்சையாக அதைச் செய்யலாம். நான் யாருடைய அனுமதியையாவது ஆட்சேபனையையாவது எதிர்பார்க்க வேண்டியதில்லை. நீ இனி எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. உன்முகத்தோற்றமும், உன்வார்த்தைகளும் உன்னுடைய சிரேஷ்டமான குணங்களை நன்றாக எடுத்துக் காட்டுகின்றன. உன்னைப் பார்க்கும்போதே என் மனசில் என்னை அறியாமல் ஒருவித வாத்சல்யமும் பாசமும் பெருகி என் மனசைக் கவருகின்றன. நீ எப்படி என்னைப் பார்த்து, உன் தாயைவிடப் பதின் மடங்கு அதிகமாக மதிக்கிறாயோ, அதுபோல, நான் உன்னை என் வயிற்றில் பிறந்த பெண்ணை விடப் பதினாயிரமடங்கு விசேஷமாக மதிக்கிறேன் என்பதை நீ பூ.ச.V-10