பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பூர்ணசந்திரோதயம் - 5 நிரபராதியான இந்தப் பெண்ணுக்கும் உங்களுடைய தகப்பனாருடைய பெயருக்கும் இழுக்கும் அவமானமும் உண்டுபண்ணுவதைத் தவிர, வேறு எவ்விதமான பயனும் உண்டாகப் போகிறதில்லை. ஆகையால், நீங்கள் நிரம்பவும் வேண்டி என்னிடம் கேட்டுக் கொண்டதைக் கருதி நான் இந்த விஷயத்தை நியாயஸ்தலம் வரையில் கொண்டுபோக விரும்ப வில்லை. என்மேலதிகாரிகளுக்கு மாத்திரம் இந்த நிகழ்ச்சியைச் சுருக்கமாக எழுதி சவத்தைப் பார்த்ததில் யாதொரு சந்தேகத்துக்கும் இடமில்லா திருந்தமையால், அதைத் தகனம் செய்ய அனுமதி கொடுத்து விட்டதாகவும் எழுதி அனுப்பிவிட்டு நேரில் போய் இந்த விஷயத்தை அதிகமாகக்

கிளற வேண்டாமென்று சொல்லி அவர்களையும் அடக்கி விடுகிறேன் என்றார்.

நீலமேகம் பிள்ளை ஒருவித மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்தவராய், “சரி; சந்தோஷம். நீங்கள் செய்யும் இந்தப் பெரிய உதவியை நான் ஒருநாளும் மறக்கவே மாட்டேன். நான் என் தகப்பனாருடைய பெயர்கெட்டுப்போய் விடுமென்றுகூட அவ்வளவாகக் கவலைப்படவில்லை. என் தகப்பனாரிடம் அபரிமிதமான பிரியம் வைத்திருந்த இந்த அம்மாள் விஷயந்தான் நிரம் பவும் பரிதாபகரமாக இருக்கிறது. இவர்களுக்காகத்தான் நான் அதிகம் இரங்குகிறேன்’ என்றார்.

இன்ஸ்பெக்டர்-வாஸ்தவந்தான். ஆனால், இந்த அம்மாள் தன்னுடைய புருஷன் விஷயத்தில் நடந்துகொண்ட மாதிரி இருக்கிறதே, அது மகா துணிச்சலான நம்பிக்கைத் துரோகமல்லவா? உங்கள் தகப்பனார் சம்பந்தப்பட்டமட்டில் இந்த அம்மாள் விஷயத்தில் நாம் இரங்கவேண்டியது நியாயந்தான். ஆனால், தன் புருஷனுக்குத்துரோகம் செய்ததைப் பற்றி நான் ஒருநாளும் இரக்கமே கொள்ளமாட்டேன்- என்றார்.

நீலமேகம் பிள்ளை:- நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனாலும் இந்த அம்மாளுடைய புருஷர் பரமதுஷ்டராம்;