பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பூர்ணசந்திரோதயம் - 5

இன்ஸ்பெக்டர், ‘ஓகோ அப்படியா ஆனால், ஷண்முகவடிவு என்ற சின்னப்பெண் இன்னம் ஊருக்குத் திரும்பி வரவில்லையா? என்ன ஆச்சரியம்! அவள் எங்கே போயிருப்பாள் என்பது தெரியவில்லையே! அவள் ஊருக்குத் திரும்பிப் போயிருப்பாள் என்றல்லவா நினைத்து நான் சும்மா இருந்துவிட்டேன்’ என்றார்.

நீலமேகம்பிள்ளை, ‘அவளையும் ஒரு வேலைக்காரியையும் அம்மணிபாயி என்ற ஒரு ஸ்திரீகோலாப்பூரிலிருந்து அழைத்து வந்தாளாம். வேலைக்காரி அசெளக்கியமாய் அம்மணிபாயியின் வீட்டில் படுத்திருந்தாளாம். அந்த அம்மணிபாயி, சக்காநாயக்கர் தெரு 13வது இலக்கமுள்ள வீட்டிலிருக்கும் சோமசுந்தரம் பிள்ளையோடிருக்கும் கமலத்தினிடம் ஷண்முகவடிவை அழைத்துக்கொண்டு போவதாகச்சொல்லி அவளை எங்கேயோ அழைத்துக்கொண்டு போனாளாம். அதன்பிறகு வேலைக்காரி ஐந்தாறு நாட்களில் செளக்கியமடைந்தாளாம். அவள் முன்னால் ஊருக்குப் போகட்டும் என்றும் தான் கமலத்தினிடம் கொஞ்ச காலம் இருந்து பின்னால் வருதாகவும், ஷண்முகவடிவு செய்தி சொல்லி அனுப்பியதாக அம்மணிபாயி வேலைக்காரியிடம் சொன்னாளாம். வேலைக்காரி அதை உண்மையென்று நம்பி ஊருக்குப் போய்விட்டாள். இந்த வரலாற்றை நான் தெரிந்து கொண்டவுடனே என் மனதில் ஒரு பெரிய சந்தேகம் உதித்தது. என் தகப்பனார் சோமசுந்தரம் பிள்ளையென்ற பொய்யான ஒரு பெயரை வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பணவுதவி செய்து வந்ததாக இந்த உயிலில் எழுதியிருக்கிறார் அல்லவா. அப்படியிருக்க, உண்மையில் சோமசுந்தரம் பிள்ளையென்று எவரும் இல்லையே; கமலமும், ஷண்முகவடிவும் எந்த சோமசுந்தரம்பிள்ளை வீட்டில் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் பெரிதாக உண்டாகிவிட்டது. நான் உடனே அந்த வேலைக்காரி யையும் அழைத்துக்கொண்டு இந்த ஊருக்கு வந்து உடனேசக்கா நாயக்கர் தெரு 13வது இலக்கமுள்ள வீட்டுக்குப் போனேன்.