பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பூர்ணசந்திரோதயம் - 5

இன்ஸ்பெக்டர், ‘மருங்காபுரி ஜெமீந்தாருடைய மாளிகையில் நெருப்புப்பிடித்துக்கொண்ட சங்கதி உங்களுக்குத் தெரியுமல்லவா? என்றார்.

நீலமேகம் பிள்ளை மிகுந்த ஆச்சரியமும் கலக்கமும் அடைந்து, ‘எப்போது நெருப்புப் பிடித்துக் கொண்டது? அது எனக்குத் தெரியவே தெரியாது!’ என்றார்.

இன்ஸ்பெக்டர், ‘நீங்கள் சொல்வது விநோதமாக இருக்கிறதே! இந்தத் தேசம் முழுதும் பரவியிருக்கும் அந்த முக்கியமான சங்கதியை உங்களிடம் யாரும் சொல்ல வில்லையா? அந்த ஷண்முகவடிவை அவர் என்றையதினம் பலாத்காரம் செய்தாரோ அதற்கு மறுநாள் இரவில் தான் நெருப்புப் பிடித்துக்கொண்டது. அதாவது லீலாவதி நம்மிடம் வந்து உங்கள் தகப்பனாருடைய ரகசியத்தை வெளியிட, நாம் வெண்னாற்றங்கரைக்குப் போய் உங்கள் தகப்பனாருடைய பிரேதத்தை எடுத்து வந்தோமல்லவா; அதே இரவில்தான் அந்த மாளிகையில் நெருப்புப் பற்றிக்கொண்டது. நீங்கள் அதன்பிறகு உங்கள் தகப்பனாருடைய கிர்த்தியங்களைச் செய்வதிலும், அவர் இறந்து போனதைப் பற்றி விசனிப்பதிலுமே உங்கள் மனதைச் செலுத்தி இருந்தமையால், யாரும் இந்த

விஷயத்தை உங்களிடம் சொல்லி இருக்கமாட்டார்களென்று

நினைக்கிறேன்’ என்றார்.

நீலமேகம் பிள்ளை, ‘ஆம். அன்றையதினம் முதல் நான் திருவாரூருக்குப் போகும் வரையில் எவரிடத்திலும் வாய்திறந்து பேசவே இல்லை. என் தகப்பனாரைப் பற்றிய விசனத்திலும் இருந்தேனல்லவா. அப்போது யாரும் என்னிடம் நெருங்க வில்லை. அதனால் எனக்கு இந்தச் சங்கதி எட்டாமல் போய் விட்டது. அந்த மாளிகையில் நெருப்பு எப்படிப் பிடித்துக் கொண்டது? அதனால் பொருள் நஷ்டம் அதிகம் ஏற்பட்டதோ? மனிதர் யாருக்கும் அபாயம் ஏற்படவில்லையே?’ என்றார்.