பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பூர்ணசந்திரோதயம்-5

இன்ஸ்பெக்டர், ‘இந்தக் காகிதத்தைப் பார்த்து நீங்கள் விசனப்படுகிறீர்கள். நான் சந்தோஷமடைகிறேன். அந்தப் பெண் நெருப்பில் அகப்பட்டு இறந்துபோயிருப்பாள் என்று நினைத்ததற்கு, அவள் உயிரோடிருக்கிறாள் என்பது எப்பேர்ப் பட்ட சந்தோஷ சங்கதி. இனி அவளை நாம் மீட்பது கடினமல்ல. இவர் கொடுத்திருக்கும் இடவிவரங்களைக் கொண்டு நான் ஒரு நொடியில் அந்தத் திருடனைப் பிடித்துச் சொத்தையும், லீலாவதியையும் மீட்டுக்கொண்டு வருகிறேன். இனி காரியம் சுலபந்தான்’ என்றார்.

நீலமேகம்பிள்ளை, ‘அந்தத் திருடன் லீலாவதியைத்துக்கிக் கொண்டுபோய் சுமார் இருபத்தைந்து தினங்கள் கழிந்து விட்டனவே. இதற்குள் அங்கே என்ன நடந்திருக்குமோ? அந்த முரட்டுத் திருடன் அவளை எப்படிப்படட துன்பத்திற்கு ஆளாக்கி இருப்பானோ தெரியவில்லையே. அதுதான் எனக்கு நிரம் பவும் கவலையாக இருக்கிறது. நான்கு பக்கங்களிலும் நமக்கு இக்கட்டாக இருக்கிறதே. இங்கே நாம் ஷண்முக வடிவைத் தேடுகிறதா? கமலத்தைத் தேடுகிறதா? அல்லது இவருடைய தம்பி மகளைத் தேடுகிறதா? எல்லாம் அவசரம். எதை நாம் முதலில் கவனிக்கிறது என்பதுதான் தெரியவில்லை” என்றார்.

இன்ஸ்பெக்டர் சிறிதுநேரம் யோசனை செய்து, “நீங்கள் எதற்கும் கவலைப்படவேண்டாம். எல்லாவற்றையும் நாம் கவனிக்கத்தான் வேண்டும். என்னிடம் ஏராளமான ஜெவான்களும், தலைமை ஜெவான்களும் இருக்கிறார்கள். அவர்களையும் உபயோகப்படுத்தி நான் முயற்சி செய்கிறேன். நீங்கள் ஜாக்ைகுப் போய்க் கவலைப்படாமல் இருங்கள். அடிக்கடி கிடைக்கும் தகவலை நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அந்த வேலைக்காரியை ஊருக்கு அனுப்ப வேண்டாம். திருவாரூரில் இருப்போரையும் இந்த ஊருக்கு வரவழைத்து விடுங்கள். அந்தப் பங்களாவையும் வேறே