பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 207 ஜெமீந்தாருடைய மாளிகையில் கொண்டுபோய் விட்டு விட்டார்கள். அவர் வயதில் கிழவராக இருந்தாலும் துன்மார்க்கத்தில் பாலியப்பருவத்தினரை விட ஆயிர மடங்கு அதிக மூர்க்கமுடையவராக இருக்கிறார். இதுவரையில் அவர் அழித்த குலஸ்திரீகள் கணக்கில் அடங்கார். இன்னமும் அவர் அதே குணமுடையவராக இருக்கிறார். அவருடைய துர் எண்ணம் நிறைவேறுவதற்கு அவர் எவ்வளவு பெருத்த திரவியம் விரயமாவதையும் மதிப்பதில்லை. எப்படிப்பட்ட குரூரச் செய்கைகளையும் நடத்தப் பின்வாங்குகிறதில்லை. அவருடைய மாளிகையில் வெல்வெட்டு மாடமென்று ஒர் இடமிருக்கிறது. அதன் பின்பக்கத்தில் அவருடைய ரதிகேளி விலாசமிருக்கிறது. அவ்விடத்தில் விகாரமான பொருட்களே நிறைந்திருக்கின்றன. அங்கே விசைவைத்த நாற்காலிகள் நாலைந்து இருக்கின்றன. தமது இச்சைக்கு இணங்கிவராத ஸ்திரீகளை அவர் மேற்படி நாற்காலியொன்றில் மாட்டிவைத்து அவர்களை வற்புறுத்துவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார். அத்தகைய கொடிய காமாந்தகார மனிதனிடத்தில் உமது பகைவர்கள் ஷண்முகவடிவைக் கொண்டுபோய் விட்டுவிட்டதாகத் தெரிகிறது. அருந்ததி என்றாலும், அந்தப் பெண்ணுக்கே தகும். அவள் உலகத்தின் சூதையே அறியாத நிஷ களங்கமான மனதை உடையவள். அவளை அந்தக் காமாதுரன் என்னவிதமான கெடுதலுக்கு ஆளாக்கினான் என்பதை அறிந்து கொள்ள இயலாமலிருக்கிறது. நீர் பரோபகாரம் செய்யப் போனதன் பலன் உமக்கே கைமேல் பலித்துவிட்டது. நீர் செய்த காரியத்தில் உமக்கும் பலவிதமான தீங்குகளை வருவித்துக்கொண்டதோடு, ஒரு பாவத்தையும் அறியாத பரமார்த்தியானஷண்முகவடிவுக்கும் அழிவைத் தேடி வைத்துவிட்டீர். இனியும் நீர் பிடிவாதமாக அந்தக் காரியத்தில் பிரவேசித்தால் இப்போது நேர்ந்ததைவிட நூறுமடங்கு கொடிய பங்கரமானதுன்பங்கள் உமக்கும் உம்மைச்சேர்ந்தவர்களுக்கும் நேருவது முக்காலும் திண்ணம். ஆகையால், நீர் அந்தப் பூ.ச.V-14 o