பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 215 எழுதித் தெரிவித்துள்ள மனிதர் யாராக இருக்கலாம் என்று அவன் ஒரு நொடிக்கு ஆயிரம் முறை சிந்தித்துப் பார்த்தான். அது அவனால் சிறிதும் யூகித்தறிய இயலாத பரம ரகசியமாகத் தோன்றியது. அவ்வாறு அவன் பலவிதத்தில் அல்லலுற்றுக் கலவரமடைந்த நிலைமையில் திருவாரூர் போய்ச் சேர்ந்தான்.

சேர்ந்தவன் நேராக ஷண்முகவடிவு முதலியோரிருந்த பங்களாவிற்குச் சென்றான். அந்தப் பங்களா நெருங்க நெருங்க தனது ஆருயிர்க் காதலியைக் காணவேண்டுமென்ற ஆவலி னாலும், அவள் அவ்விடத்திலிருந்தால், தன்னிடம் பேசுவாளோ மாட்டாளோ என்ற கவலையினாலும் தன்மீது அவள் கொண்டுள்ள சம்சயத்தைத் தான் எவ்வாறு நிவர்த்திக்கிறது என்ற மலைப்பினாலும் அவனது மனம் பெரும்புயலில் கொந்தளித்துத் தத்தளிக்கும் கடல்போல அல்லோல கல்லோலப் படத் தொடங்கியது. அத்தகைய பரமவேதனையான நிலைமையில் அவன் அந்தப் பங்களாவின் வாசலை அடைந்தான். ஆனால், அவ்விடத்தில் அவனது ஏமாற்றமும் ஏக்கமும் அதிகரித்தனவே அன்றிக் குறையவில்லை. அந்தப் பங்களாவின் வெளிக்கதவு பூட்டப்பட்டிருந்ததைக் காண, அவனது மனம் இன்னதென்று விவரிக்க இயலாத பெருத்த வேதனை அடைந்து தவிக்கத் தொடங்கியது. ஒருகால் ஷண்முகவடிவு தஞ்சையிலிருந்து வந்திராவிட்டாலும், அந்தப் பங்களாவில் பrவாத நோய் கொண்டு படுத்திருந்த நீலலோசனி அம்மாள், வேலைக்காரி முதலியோர் எங்கே போயிருப்பார்கள் என்ற யோசனையும் திகைப்பும் திகிலும் தோன்றி சகிக்கவொண்ணாதபடி வருத்த ஆரம்பித்தன. முக்கியமாக ஒரே ஒரு எண்ணமே உறுதியாகத் தோன்றியது. தன்னைச் சிறைச்சாலையிலிருந்து விடுவித்துத் தஞ்சைக்கு வரவழைத்துக் கடிதத்தின் மூலமாக எல்லா விஷயங்களையும் தெரிவித்த அந்த மனிதரே பங்களாவில் இருந்தோருக்கும் கடிதம் எழுதி, ஷண்முக வடிவுக்கு நேர்ந்த விபத்தைத்