பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 23 பெண்ணாவது தன்னோடு இருந்தால், தான் சொல் வதை உறுதிப்படுத்த அவள் ஒருத்தியாவது உபயோகப்படுவாளே என்றும், அவளும் எங்கேயோ போய்விட்டாளே என்றும் கலியாணசுந்தரம் நினைத்துப் பெரிதும் சஞ்சலமுற்றான்; தான் அந்த மகா தர்மசங்கடமான வேளையில் செயலற்றவனாய் இருக்க நேர்ந்திருப்பதைச் சிறிதும் சகியாதவனாய்ப் பெரிதும் தத்தளித்தான். தான் உடனே போய் அந்தக் கலியாணம் நடவாமல் தடுத்துவிட வேண்டுமென்ற எண்ணத்தினால், அவனது மனம் பதறித் துடித்தது. தேகம் கட்டிலடங்காமல் பறந்தது. மங்களகரமாகக் கலியாணம் நடக்கையில் அபசகுனமாகத் தான் போய் அதற்கு இடைஞ்சல் செய்தால், இளவரசர் முதலியோர் தன்மீது கோபம்கொண்டு தன்னைக் கடிந்து துஷித்து ஏதேனும் துன்பத்திற்கு ஆளாக்குவாரோ என்ற எண்ணம் உண்டானது. ஆனாலும் தான் அந்தச் சந்தர்ப்பத்தில் சும்மா இருப்பது பெரும் பாவகரமான செய்கை என்ற நினைவு அவனைத் தூண்டிக் கொண்டே இருந்தது. ஆகவே, தனது உயிர் போவதானாலும், அதை இலட்சியம் செய்யாமல், எல்லாவற்றிற்கும் துணிந்து தான் உடனே அரண்மனைக்குப் போப், இளவரசரைக் கண்டு சிவபாக்கியத்தின் மூலமாகத் தனக்குக் கிடைத்த செய்தியையும் தான்செய்த முயற்சிகளையும், அனுபவித்த இடர்களையும் தெரிவித்து, லலிதகுமாரி தேவி சுத்தமான மனிஷியென்பதை ருஜுப்படுத்தும் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டு, அதன் முடிவு தெரிகிற வரையி லாகிலும் கலியாணத்தை நிறுத்திவைக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டுமென்று நமது கலியாணசுந்தரம் உறுதி செய்துகொண்டு அரண்மனை இருந்த திக்கை நோக்கி நடக்கலானான். ஒருகால் அதற்குள் கலியாணம் முடிந்து போயிருக்குமோ என்ற கவலை அவனைத் துன்புறுத்தத் தொடங்கியது. ஆகையால், தான் ஒட்டமாக ஒடி நிரபராதியான லலிதகுமாரி தேவிக்கு நேரவிருக்கும் பெருத்த பொல்லாங்கை விலக்க வேண்டுமென்ற ஆவலினால் தூண்டப்பட்டு நிரம்பவும்