பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 . பூர்ணசந்திரோதயம் - 5 என்ற கவலையும் யோசனையும் ஒரு புறத்தில் எழுந்து கலக்க, தனது அப்போதைய நிலைமை எப்படி முடியுமோ என்ற சிந்தனையும் மேலோங்கி நிற்க, அந்த அருங் குண நங்கை பிரமைகொண்டு சுவரில் தீட்டப்பட்ட சித்திரப்பாவை போல அசைவற்று நின்ற தருணத்தில், அவளுக்குப் பின்புறத்தில் சடேரென்று ஒரு கதவு திறந்துகொண்டது. அதனால் உண்டான ஒசையைக் கேட்டு அந்த மடமங்கை திடுக்கிட்டு நடுநடுங்கித் திரும்பி பார்த்தாள். ஐரிகை வேலைப்பாடுகள் நிறைந்த வெல் வெட்டு ஆடைகளும், நவரத்னப் பாவையும், வைர ஆபரணங்களும் தரித்து தகத்தகாயமான தோற்றத்தோடும் புன்னகை அரும்பிய இனியமுகத்தோடும் இளவரசர் அடுத்த கடினத்தில் அவளை நோக்கி உள்ளே நுழைந்தார். இருவரும் ஒருவரையொருவர் நன்றாகப் பார்த்துக்கொண்டனர். அப்போது வந்தவரே அந்த நாட்டு இளவரசர் என்பதை நமது இளந்தோகை உடனே எளிதில் உணர்ந்துகொண்டாள். நாணம், மடம், அச்சம் முதலிய உணர்ச்சிகள் அபாரமாக எழுந்து அவளை நிலை கலங்கச் செய்தன. அவளது கைகால்களெல்லாம் வெடவெட வென்று நடுங்கிப் பின்னுகின்றன. மேனி வியர்த்துக் கட்டிலடங்காமல் தள்ளாடுகிறது. மனதில் திகிலே மயமாக நிறைந்து குடிகொண்டது. அவள் உடனே ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அங்கிருந்த ஒரு கம்பத்தின் மறைவை அடைந்தாள். அவளது சிரம் காம்பொடிபட்ட தாமரை மலர்போல வாடிக் கீழே சாய்ந்தது. அவ்வாறு அந்த மடவன்னம் எதிர்ப்பட்டுப் போய்க் கம்பத்திற்கப்பால் மறைவதற்குள் அவளைநகம் முதல் சிகைவரையில் பன்முறை ஏறிட்டுப் பார்த்த இளவரசர் அப்படியே பிரமித்து முற்றிலும் திகைத்து இரண்டொரு நிமிஷ நேரம் வரையில் என்ன பேசுவதென்பதை அறியாமல் மெளனமாக நின்றுவிட்டார். ஷண்முகவடிவு இயற்கை யிலேயே அழகுத்திரளாயிருந்தது அன்றி, ஹேமாபாயியினால் செய்யப்பட்ட அற்புதமான அலங்காரத்தினாலும், வைர ஆபரணங்களினாலும் பட்டாடைகளினாலும் ஒப்புயர்வற்ற