பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பூர்ணசந்திரோதயம் - 5 அழகிருந் தென்ன! எவ்வளவு அருமையான விவேகமிருந் தென்ன சகலமான யோக்கியதைகளும் இருந்தும் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்ற குணங்கள் இல்லாவிட்டால், அவர்களை மணமில்லாத ரோஜா புஷ் பத்திற்கு சமமென்று சொல்லலாம். அழகு முதலிய வேறு எந்த யோக்கியதையும் அடையாதவள் கூட, நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்ற பெண் தன்மை நிறைந்தவளாக இருப்பாளானால், அது ஒரு தனியான வசீகரமாகத்தான் இருக்கிறது. அப்படியிருக்க, நீயோ அழகு, குணம் முதலிய எல்லா அம்சங்களிலும் சர்வ சிலாக்கிய மான சிருஷ்டியாக இருப்பதோடு மேலே சொல்லப்பட்ட குணங்களும் சமர்த்தியாய் நிறைந்தவளாக இருக்கிறாய்; ஆகையால், உனக்கு நிகரான ஸ்திரீ இந்த மண்ணுலகிலும் இல்லை; விண்ணுலகிலும் இருக்கமாட்டாள் என்றே நான் நினைக்கிறேன். இப்படிப்பட்ட பரிபூர்ணமான கலியான குணங்கள் நிறைந்தபெண்கள் நாயகமான உன்னை என்னிடம் கொண்டுவந்து சேர்த்த மனிதர்கள் இப்போது இங்கேயிருந்தால், அவர்களுக்கு நான் கனகாபிஷேகம் செய்வேன்’ என்று மெய் மறந்து அபாரமாக அந்த மடக்கொடியைத்துதிக்கத் தொடங்கிய படி அவளிருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

அவரது சொற்களைக்கேட்ட ஷண்முகவடிவின் நிலைமை முன்னிலும் பன்மடங்கு அதிக சஞ்சலமுடையதாயிற்று. ஆனால், இளவரசர் தன்னை நோக்கி நடந்துவந்ததை அவள் கவனித்தாள். ஆதலால், அவர்தன்னிடம் வந்து பலாத்காரத்தில் இறங்கு வாரோ என்ற பீதி தோன்றியது. ஆகையால், அவள் தனது மனதைத் திடப்படுத்திக் கொண்டு ஒருவாறு துணிவடைந்து, “கொஞ்ச நேரத்துக்குமுன் எனக்குக் கிடைத்த ஒரு கடிதத்தில் எழுதப்பட்டிருக்கும் சங்கதியைக் கொண்டும், தங்களுடைய திரு உருவத்திலிருந்தும், தாங்கள்தான் இந்தத் தேசத்து இளவரசர் என்று நினைக்கிறேன்’ என்றாள்.

இளவரசர் இனிமையாகப் புன்னகை செய்து, ‘ஆம். நான்