பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பூர்ணசந்திரோதயம்-5 அந்த மடந்தை அவ்வாறு பேசுவாள் என்பதை இளவரசர் சிறிதும் எதிர்பார்க்காதவர் ஆதலால், அவர் ஒருவாறு திடுக்கிட்டுத் திகைப்படைந்தார். ஆனாலும், அவள் ஒருகால் வேண்டுமென்றே பதிவிரதைபோல நடிக்கிறாளா என்ற நினைவைக் கொண்டவராய், “நீ சொல்வதெல்லாம் புஸ்தக நீதியே ஒழிய, அதன்படி உலகத்தில் எல்லாரும் நடக்கிறார்களா என்று நாம் கவனிக்க வேண்டாமா? ஒருவேளை உனக்கு இன்னொரு யோசனை இருக்குமோ? நான்பூர்ணசந்திரோதயம் என்ற பெண்ணையும் கட்டிக் கொள்வது உன் மனசுக்குப் பிடிக்கவில்லையா? அப்படியானால் உண்மையைத் திறந்து சொல். நான் அவளைவிட்டு உன்னை மாத்திரம் கலியாணம் செய்துகொண்டு உன்னையே பட்டமகிஷி ஆக்குகிறேன். இந்த வார்த்தை ஸத்யமான வார்த்தை. நீ இதை நம்பலாம். அந்த மாதிரி எழுத்து மூலமாக எழுதிக் கொடுக்கச் சொன்னாலும், நான் அப்படியே செய்கிறேன். அதற்காக நீ கொஞ்சமும் யோசனை செய்ய வேண்டியதில்லை’ என்றார்.

அதைக்கேட்ட பெண்ணரசியான ஷண்முகவடிவு, ‘நான் இவ்வளவுதூரம் சொன்னபிறகும் மகாராஜா இப்படிப் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. நான் சொன்ன நியாயம் ஏட்டுச் சுரக்காய் என்று தாங்கள் அவமதித்துப் பேசுவது சரியல்ல. ஏழ்மை நிலைமையிலுள்ள சாதாரண ஜனங்கள் தமது தினப்படி நடவடிக்கைகளில் நான் சொல்லுகிறது போலவே உறுதி தவறாமல் நிர்ணயமாக நடந்து கொண்டு வருகிறார்கள். அவர்கள் உறுதி தவறி நடந்தாலும், ஜனங்களுக்கெல்லாம் கடவுள் போன்ற தாங்கள் அவர்களுக்கு நல்ல வழி காட்டி அவர்கள் நியாயப்படி நடக்கச் செய்ய வேண்டும். அப்படியிருக்க, தாங்களே இப்படிப்பட்ட காரியங்களை அனுமதித்தால், உலகம் எப்படிக் கட்டுப்பாட்டில் நிற்கும்? என்னைக் கண்டவுடன், பூர்ணசந்திரோதயத்துக்குத் தாங்கள் செய்துள்ள உறுதியை ஒரு நொடியில் மாற்ற யத்தனிக்கிறீர்கள்.