பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பூர்ணசந்திரோதயம் - 5 இளவரசரது காலில் வீழ்ந்து, பட்டமகிஷி உண்மையிலேயே குற்றவாளிதான் என்றும், அவள் கர்ப்பிணியாக இருப்பது உண்மைதான் என்றும் தாங்கள் கேவலம் வேலைக்காரிகள் ஆதலால், மகாராணியின் சொற்படி நடக்க நேர்ந்ததென்றும் கூறி, தாங்களும் அதில் சம்பந்தப்பட்டதைப்பற்றி இளவரசர் தங்களை மன்னிக்க வேண்டுமென்று நிரம்பவும் பணிவாகவும் உருக்கமாகவும் இறைஞ்சி வேண்டிக்கொண்டாள். அதைக் கேட்கவே, இளவரசர் தமது பட்டமகிஷியின் மீது கொண்ட துர்அபிப்பிராயம் சந்தேகமற ஊர்ஜிதப்பட்டது. அவர்தனத்தை அரண்மனைக்கு அனுப்பிய பிறகு சாமளராவோடு அந்த நகரை விட்டுப் புறப்பட்டுத் தஞ்சைக்குப் பிரயாணமாய், சில தினங்களில் தமது அரண்மனையை அடைந்தார்.

அடைந்தவர் சர்மளராவைப் பூர்ணசந்திரோதயத்தினிடம் அனுப்பி, பூனாவில் தாம் அறிந்த விருத்தாந்தங்களை அவளுக்குத் தெரிவிக்கவும், தமது கலியாணத்தை உடனே நிறைவேற்ற அவள் இசைய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளவும் செய்ய, சாமளராவ் அவ்வாறே பூரண்சந்திரோ தயத்தினிடம் போய் விட்டுத் திரும்பி வந்து, அவள் கலியானத்திற்கு இணங்கி விட்டாள் என்றும், ஆனால் கலியாணச் சடங்கு முடியும் முன் இளவரசர் தனது அந்தப்புரத்திற்கு வந்தால் ஜனங்கள் தன்னைப்பற்றி ஏதேனும் அவதூறு சொல்வார்கள் என்று தான் நினைப்பதால் அதன் பின்னரே அவர் தன்னிடம் வருவது உசிதமானதென்று அவள் விக்ஞாபனம் செய்துகொண்டதாகவும் கூறினான். இளவரசர் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டதன்றி, உடனே தமது மந்திரி முதலிய பிரதான உத்தியோகஸ்தர்களை வருவித்து, பூனாவிலிருந்த இராஜகுமாரி மீது ஏற்பட்ட தோஷத்தின் விவரத்தை எடுத்துக்கூறி, அவளைத் தாம் விலக்கி விட்டதாகவும், பூர்ணசந்திரோதயம் என்ற தார்வார் தேசத்து ராஜகுமாரியை மணந்து பட்டமகிஷியாக்கப் போவதாகவும்