பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27O பூர்ணசந்திரோதயம் - 5 ஆனாலும், நீர் என்னசொல்லுகிறீர் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தினால் நான் இவ்வளவு தூரம் பொறுத்தேன். நீர் சொல்வதில் ருஜுவான விஷயம் எதுவுமில்லை. உம்முடைய சொல்லை மதித்து இந்தக் கலியாணத்தை நிறுத்திவைப்பது அநாவசியமான காரியம். நீர் இனி போகலாம். அடே சேவகர்களே! இந்த மனிதரை அழைத்துக்கொண்டு போய் அரண்மனைக்கு வெளியில் விட்டு வாருங்கள் என்று கூறிக் கண்டிப்பாக உத்தரவு பிறப்பித்தார்.

உடனே பாராக்காரர்கள் இருவரும் இரண்டு பக்கங்களிலும் நெருங்கிவந்து கலியாணசுந்தரத்தின் இரண்டு கைகளையும் பிடித்து இழுக்க ஆரம்பித்தனர்.

அப்போது பக்கத்தில் நின்ற அம்மணிபாயி, “மகாராஜாவே! இந்த நகரத்து மகா ஜனங்களெல்லோரும் கூடியிருக்கும் இந்த அபாரமான ஸதசின் முன்னிலையில் இந்த மனிதர் என்னைப் பற்றி நிரம் பவும் அவதூறான வார்த்தைகள் சொல்லியி ருக்கிறார். இதனால் என்னுடைய யோக்கியதையைப் பற்றி எல்லோரும் இழிவாக மதிக்க இடம் ஏற்படுகிறது. பெரிய இடத்து விஷயத்தில் நான் இப்படிப்பட்ட சதியாலோசனை செய்ததாகச் சொல்வது சாதாரணமான சங்கதியல்ல; இது நிரம் பவும் விபரீதமான விஷயம். ஆகையால், மகாராஜா இந்த மனிதரைச் சுலபத்தில் விடுவது நியாயமல்ல. இந்தக் கலியாணம் நிறைவேறி, மகாராஜாவுக்கு அவகாசம் கிடைக்கிற வரையில் இந்த மனிதர் எங்கேயும் தப்பிப்போய் விடாமல் காவல் போட்டு இவரைப் பந்தோபஸ்தாக வைக்க உத்தரவாக வேண்டும். இந்த விஷயத்தைத் தக்கசாட்சியங்களைக்கொண்டு விசாரித்து நான் சொல்வது சரியா, இவர் சொன்னது சரியா என்பதை நிச்சயித்து குற்றவாளிக்குத் தக்க தண்டனை விதிக்க வேண்டும்’ என்று பணிவாகக் கேட்டுக் கொண்டாள்.

அதைக் கேட்ட இளவரசர், ‘'சரி; அது நியாயமான வேண்டுகோள்தான். பாராக்காரர்களே! இந்த மனிதரைக்