பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 பூர்ணசந்திரோதயம் - 5 பக்கங்களிலும் தனது தந்தையும், தமையனும் அன்பே வடிவாக இருந்து தன்னைத் தேற்றிக் கொண்டிருந்ததை உணர்ந்து, மிகுந்த நாணமும் கிலேசமும் அடைந்தவளாய் மெதுவாக எழுந்து நிற்க முயற்சி செய்தாள்; அதைக் கண்ட இளவரசர், “கமலம் எழுந்திருக்காதே. ஒருவேளை மறுபடியும் மயக்கத்தினால் விழுந்தாலும்,விழுந்துவிடுவாய். பயப்படாமல் அப்படியே உட்கார்ந்துகொள். இங்கே வேறே யார் இருக்கிறார்கள்? நான் உன்னைப் பெற்ற தகப்பன். இவர் உன் உடன்பிறந்தார். நீ கிலேசப்படவேண்டிய அவசியமே இல்லை. நீயும் நானும் உண்மையில் இன்னார் என்று தெரிந்துகொள்ளக் கூடாத நிலைமையில் நாம் ஒருவரையொருவர் பார்த்து இந்தக் கலியான ஏற்பாட்டைச் செய்தோம். ஆகையால், இது வேண்டுமென்று செய்யப்பட்ட குற்றமாகாது. நீ என் மகள் என்பது நமக்குத் தெரிந்திருந்தால், நீயாவது நானாவது இந்த எண்ணத்தைக் கனவிலாவது கொண்டிருப்போமா? ஒரு நாளுமில்லை. ஆனால் தெய்வாதீனமாக நாம் எவ்விதமான பாவச் செய்கையையும் நடத்தாமல், நமது யத்தனம் இவ்வளவோடு தடைபட்டுப் போனது. நீயும் நானும் சந்தித்ததும் ஒருவர்மேல் ஒருவர் பிரியங்கொண்டதும் முடிவில் நமக்கு நன்மையைத் தருவதற்காக ஏற்பட்ட சம்பவங்க ளென்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால், நீங்கள் என்னுடைய குழந்தைகள் என்ற விஷயமே எனக் குத் தெரியப் போகிறதில்லை. இந்த உயிலைப் படித்த நீலமேகம் பிள்ளை உங்களை மாத்திரம் கண்டு ரகசியமாக இந்த ரகசியத்தை உங்களிடம் மாத்திரம் சொல்லி இருப்பாரே அன்றி, என் மேல் நியாயமாக அவருக்கு இருக்க வேண்டிய அருவருப்பினால் அவர் இந்த விஷயத்தை என்னிடம் சொல்லி இருக்கவே மாட்டார். ஆகையால், ஈசுவரன் என்மேல் கருணை கூர்ந்து இப்படிப்பட்ட விபரீத நிகழ்ச்சிகளை எல்லாம் காட்டி முடிவில் நன்மையைச் செய்து வைத்தார். இதுவரையில் மறைந்து கிடந்த விலைமதிப் பற்ற இரண்டு பெரிய