பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 பூர்ணசந்திரோதயம் - 5 கொண்டு படுத்துவிட்டதையும், சொற்ப காலத்திற்குப் பிறகு சோமசுந்தம்பிள்ளை இடத்திலிருந்து பணம் வராமல் நின்று போனதனால் ஜீவனத்திற்கு வேறு வழியறியாமல் அவரைத் தேடிக்கொண்டு தான் தஞ்சைக்கு வந்ததையும், அவ்விடத்தில் தான் பணப்பையைப் பறிகொடுத்துத் தத்தளித்த சமயத்தில் ஒரு ஸ்திரீ வந்து தனக்குத் தைரிய வசனங் கூறித் தன்னைத் தேற்றியதையும் சவிஸ்தாரமாகக் கூறி அதற்குமேல் நடந்த விருத்தாந்தங்களையும் சுருக்கமாகக் கூறத் தொடங்கி, “அப்படி வந்து எனக் குத் தைரிய வசனம் சொல்லி, சோமசுந்தரம் பிள்ளையைத் தேடி அவரிடம் என்னை அழைத்துக்கொண்டு போவதாக அந்த ஸ்திரீஎனக்கு உறுதி கூறி என்னை அவளுடைய வீட்டிற்கு அழைத்துப் போனாள். அவளே இந்த அம்மணிபாயி. அவளும், சாமளராவும் என்னிடம் மட்டற்ற வாத்சல் யம் பாராட்டி கண்மணியை இமைகள் காப்பதுபோல என்னைக் காப்பாற்றி வைத்துக் கொண்டிருந்த தன்றி பல நாட்கள் வரையில் சோமசுந்தரம் பிள்ளையைத் தேடுவதாகவே நாளைக் கடத்திக் கொண்டு வந்து ஷண்முக வடிவு அதைரியப்படாமல் இருப்பதற்காக, நான் சோமசுந்தரம் பிள்ளையைக் கண்டு விட்டதாகவும், அவர் என்னைத் தம்முடைய அபிமான புத்திரியாக வைத்துக்கொண்டு விட்டதாகவும் எழுதும் படி தூண்டினார்கள். அவர்கள் என்னிடம் காட்டிய அபாரமான பிரியத்தினால் மயங்கி நான் அவர்கள் சொல்வதுபோலவே செய்தேன். அவர்கள் பெரும் பணத் தொகைகளைக் கொடுத்து ஷண்முகவடிவிற்கு அனுப்பச்செய்தார்கள். அப்படியே இருந்திருந்து நாளடைவில் என் புத்தியை மயக்கி, நான் ராஜஸ்திரீபோல இருக்கிறேன் என்றும், இந்த ஊர் இளவரசருக்கு என்னைக் கலியாணம் செய்துவைத்து விடுவதாக வும், முதலில் வேடிக்கை போலப் பிரஸ்தாபித்துப் பிறகு உண்மையில் அப்படியே செய்துவிடுவது என்றும் தீர்மானித்துக் கொண்டு அதற்காக ஜெகன்மோகனவிலாசமென்ற மாளிகை யில் சகலமான அலங்காரங்களுடன் என்னை வைத்தார்கள்.