பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 பூர்ணசந்திரோதயம்-5 நடந்துகொள்ள வேண்டுமென்று சொல்லிவிட்டு வந்தேன். இவளிருந்த இடத்தின் கதவுகளெல்லாம் வெளியில் தாளிடப் பட்டிருந்தன. மறுநாள் காலையில் வேலைக்காரி, இவளிருந்த விடுதிக்குப் போய்ப் பார்க்க, கதவுகளெல்லாம் உட்புறத்தில் தாளிடப்பட்டிருந்தன. ஒன்றை உடைத்து உள்ளே போய்ப் பார்க்க இவள் காணப்படவே இல்லை. கதவுகளெல்லாம் வெளியிலும் தாளிடப்பட்டபடியே இருந்தன. ஆகையால், இவள் முன் பக்கத்திலிருக்கும் பலகணித் திறப்பின் வழியாகக் கீழே விழுந்து இறந்து போயிருப்பாளோ என்று நினைத்து நான் உடனே ஓர் ஆளைக் கீழே அனுப்பிப் பார்த்தேன். அங்கே எவ்விதக் குறிப்பும் காணப்படவில்லை. இவள் எப்படித்தான் மாயமாக மறைந்து போயிருப்பாள் என்று நான் எண்ணமிட்டு யாராவது வேலைக்காரிதான் கதவைத் திறந்து இவளை வெளியில் அனுப்பியிருப்பாள் என்று முடிவு செய்து கொண்டேன். இந்தக் கலியாண வைபவத்தில் வேறு விஷயங் களில் என் கவனம் சென்றதால், நான் இவளைப் பற்றிய நினைவை அதோடு மறந்துவிட்டேன். இவள் எப்படித் தப்பித்துப் போனாள் என்பதை இவளிடமே கேட்டுத்தெரிந்து கொள்வோம்’ என்றார்.

அந்த சம்பாஷணையைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த ரrாமிர்தம் ஜெமீந்தார், ‘மகாராஜாவே தங்களுடைய சந்தேகத்தை நான் நிவர்த்தி செய்கிறேன். தாங்கள் விட்டுப் போன பின் இந்தப் பெண் தனக்குக் கொண்டுவரப்பட்ட போஜனத்தை உண்பவள்போல நடித்து, வேலைக்காரியை வெளியில் அனுப்பிவிட்டுக் கதவுகளின் உட்புறத் தாழ்ப்பாளை எல்லாம் மாட்டிவிட்டு முன் பக்கத்திலிருந்த பலகணித் திறப்பின் வழியாக வெளிப்பட்டு பக்கத்திலிருந்த சாக்கடைத் தகரக்குழாயைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கி கொஞ்சதூரம் வர, அப்போது வளையங்கள் பிடுங்கிக் கொண்டமையால், குழாய் அப்படியே செங்குத்தாய் நேராக எதிர்வீட்டுப் பக்கம்