பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 பூர்ணசந்திரோதயம் - 5 மனதால் யூகித்துக் கொள்ளவேண்டுமே அன்றி, அதை விவரித்துச் சொல்வது அசாத்தியமான காரியமாகும். மகா பரிசுத்தனும், உத்தம லக்ஷணங்கள் யாவும் பூர்ணமாக நிரம்பப் பெற்றவனுமான கலியாணசுந்தரத்தின் விஷயத்தில் தான் இடையில் சந்தேகங் கொண்டு அவனை வெறுத்த எண்ணம் ஷண்முகவடிவின் மனதில் உண்டானது. ஆகையால், அவள் குன்றிப்போய் நாணித் தலைகுனிந்து ஒரு பக்கத்தில் ஒடுங்கி நின்றவண்ணம் தழுதழுத்த குரலில் பேசத் தொடங்கி, ‘தங்களுடைய உண்மையான யோக்கியதையை நான் பல தடவைகளில் அனுபவ பூர்வமாகக் கண்டிருந்தாலும், கோலாப்பூரில் அந்த வஞ்சகர்கள் செய்த சதியை நம்பி நான் தங்கள் விஷயத்தில் சந்தேகம் கொண்டேன். அது பொய் யென்பதை இப்போது நான் தெரிந்துகொண்டேன். தங்கள் விஷயத்தில் இப்படிப்பட்ட சம்சயம் கொண்டதைப் பற்றி என் மனம் இப்போது சங்கடப்படுகிறது இன்னவிதம் என்பதை நான் எப்படி எடுத்துச் சொல்லப் போகிறேன்? பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் என்பார்கள். அது என் விஷயத்தில் முற்றிலும் நிஜமாயிற்று. என்னுடைய மெளடீகத்தினால் நான் தங்கள் விஷயத்தில் அபராதியாகி விட்டேன். அதைத்தாங்கள் பாராட்டாமல் rமிக்க வேண்டும்” என்றாள்.

அதைக்கேட்ட கலியாணசுந்தரம் அவளது உண்மையான உருக்கத்தையும் பணிவையும் கண்டு மனம் நைந்து ஆனந்தக் கண்ணிர் விடுத்தவனாய், ‘பெண்ணே ஷண்முகவடிவு! நீ என் மேல் சந்தேகம் கொண்டதைப் பற்றி நான் கொஞ்சமும் வருத்தம் பாராட்டவில்லை. அந்த நிலைமையில் யாரும் சந்தேகம் கொள்வது நிச்சயமே. அப்படிஇருக்க, நீ சந்தேகங் கொண்டதைப் பற்றி நான் உன் மேல் வர்மம் பாராட்டுவது மூடத்தனமே அன்றி வேறல்ல. அதுவுமன்றி, நீ மகா பரிசுத்தமான நடத்தையும் உயர்வான குணங்களும்