பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 பூர்ணசந்திரோதயம்-5 தங்கையென்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவர் ஏன் சும்மா உட்கார்ந்திருந்தார் என்ற கேள்வி பிறக்குமாதலால், அதற்குத் தாம் சமாதானம் சொல்லவும் தமது குடும்ப ரகசியங்களை வெளியிடவும் நேருமென்று எண்ணி அவர் உண்மையை மூடிமூடிப் பேசி, நான் அந்தப் பெண்ணைக் கட்டிக்கொள்ள முறையில்லை என்று சொன்னார். முடிவில், அவள் என்னுடைய மகளென்று அவர் துணிந்து சொல்லிவிட்டார். அது உண்மையாகச் சொல்லப்பட்ட தல்ல; ஒரு சங்கேதமாகச் சொல்லப்பட்டது. நானும் நீலமேகம் பிள்ளையின் தகப்பனாரும் இரண்டுடலும் ஒருயிருமாயிருந்த அந்தரங்க நண்பர்கள்; அவருடைய மகளை நான் கலியாணம் செய்து கொள்வது என்னுடைய மகளையே கலியாணம் செய்துகொள்ளும் பாவத்துக்குச் சமமானது என்று எடுத்துக் காட்டுவது போல அவர் மறைவாகப் பேசினார். ஏனென்றால், அதைக் கேட்டு நான் அவசியம் கலியாணத்தை நிறுத்துவேன் என்றும், பிறகு உண்மையைச் சொல்லிக் கொள்ளலாம் என்றும் நினைத்து அவர் அந்த மாதிரியாக மாற்றிப் பேசினார். நான் இப்போது அவரோடு தனியாகப்போய் அவர் காட்டிய சில கடிதங்களைப் பார்த்தேன். அவர் சொன்ன விவரங்களையும் கொஞ்ச நேரத்திற்கு முன்வந்த இன்னொருவர் சொன்ன விஷயங்களையும் ஒத்திட்டுப் பார்த்தேன். உண்மை எல்லாம் விளங்கிப்போய்விட்டது. இவருடைய தங்கைமார் இருவரும் நிரம்பவும் நற்குணங்கள் வாய்ந்தவர்கள். இந்த அம்மணிபாயி முதலியோர் என் பட்டமகிஷியின் விஷயத்தில் செய்த சதியாலோசனையின் விவரம் கமலத்துக்குத் தெரியவே தெரியாது. இவர்கள் அந்தப் பெண்ணைக் கடைசிவரையில் ஏமாற்றி இருக்கிறார்கள். ஆகையால், அந்தப் பெண் விஷயத்தில் யாரும் கொஞ்சமும்துர்அபிப்பிராயம் கொள்ளவே நியாயமில்லை. இவ்வளவு பிரயாசைப்பட்டு நாம் ஏற்படுத்திய இந்தக் கலியான மண்டபம் வெற்று மண்டபமாக முடிந்தால், அது இந்த அரண்மனைக்கே ஒர் அபசகுனம் போல