பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 335 விட்டு வந்தேன். அவர் இறக்கும் நிலைமையில் இருக்கிறார்; உடனே இவரை அழைத்துவர ஆக்ஞாபித்தார். இங்கே கங்கன விசர்ஜனம் ஆகுமுன், அதைச் சொல்லக் கூடாதென்று நான் பொறுத்திருந்து அது முடிந்தவுடன் வந்தேன்’ என்றார்.

அந்த வரலாற்றைக் கேட்ட இளவரசர் முதலிய எல்லோரும் இன்பமோ துன்பமோ என்று அறிய இயலாத பெருத்த மனக் கிளர்ச்சியும் பூரிப்பும் அடைந்து, கலியாணசுந்தரத்தின் மேம்பாட்டைப் பற்றி எண்ணி எண்ணி கட்டிலடங்காக் களி கொண்டனர். கலியாணசுந்தரமும், நீலமேகம் பிள்ளையும் லீலாவதி திரும்பி வந்ததைப் பற்றி மட்டற்ற சந்தோஷமடைந்து அதைப்பற்றி ஈசுவரனை மனதார ஸ்தோத்திரம் செய்தனர்.

பூ.ச. V-22