பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பூர்ணசந்திரோதயம் - 5 பரஸ்பரம் என்மேல் அத் யந்த பிரேமையும் வாஞ்சையும் வைத்திருக்கிறாள். ஆதலால் எங்களை மீறி எங்கள் இருவருக்கும் விலக்கமுடியா வகையில் நட்பு ஏற்பட்டு விட்டது. என் காலத்துக்குப் பிறகு என் மகன் இந்த லீலாவதிக்கும் பெருத்த பொருளுதவி செய்து இவளுடைய கடைசிக்காலம் வரையில் வைத்துக் காப்பாற்ற வேண்டியது.


என்று நீலமேகம் பிள்ளையின் உயிலின் ஒரு பாகத்தைப் படிக்கவே, அதுவரையில் அவருடைய அறிவுக்குத் தெரியாமல் மறைந்து கிடந்த ஒரு புதிய உலகமே அவரது திருஷ்டிக்குப் புலப்பட்டது போல இருந்தது. லீலாவதியைத் தான் வைத்துக் காப்பாற்ற வேண்டியது முக்கியமானது என்பதோடு, தான் உடனே புறப்பட்டுத் திருவாரூர் போய், அவ்விடத்தில் அநாதரவாக இருக்கும் தமது தங்கைகளைக் கண்டு, முக்கியமான ரகசியங்களையும் வெளியிட்டு, அவர்களுக்குச் சகலமான உதவிகளையும் செய்யவேண்டுமென்ற ஆவலும் ஆசையும் அபாரமாகப் பெருகி எழுந்தன. ஆகவே, நீலமேகம் பிள்ளை மறுநாளே தஞ்சையை விட்டுப் புறப்பட்டுத் திருவாரூருக்குப் போய் நீலலோசனி அம்மாளினது பங்களாவை அடைந்தார். அவ்விடத்தில் கமலம் ஷண்முகவடிவு ஆகிய இருவரும் இல்லையென்பது வாசகர்களுக்குத் தெரிந்த விஷயம். ஆதலால், நீலமேகம் பிள்ளை அடைந்த ஏமாற்றத்தை யும் துயரத்தையும் விவரித்து சொல்வதைவிட யூகித்துக் கொள்வதே எளிது.