பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பூர்ணசந்திரோதயம் - 5 யையும் ஒருவேளை அபகரித்துக்கொண்டு போய்விடுவானோ என்ற கவலையும் அவரது மனதில் தோன்றி வருத்தியது. தமது பொருட்களெல்லாம் போவதானாலும், தாம் லீலாவதியை மாத்திரம் அந்த முரட்டுத் திருடன் அபகரித்துப் போக விடக்கூடாதென்ற தீர்மானம் அவரது மனத்தில் உண்டாயிற்று. அந்த அபாரமான கவலையோடு அந்த நாற்காலியின் கொடுமையையும் சகித்திருக்க அவரால் கூடாமல் போயிற்று. அந்த மாளிகை முழுதும் அப்போது முற்றிலும் நிசப்தமாக இருந்தது. ஆகையால், அந்த முரட்டுத் திருடன் வெளியில் போயிருப்பான் என்ற எண்ணம் தோன்றியது. ஆகவே, அவரது மனதை அழுத்திக்கொண்டிருந்த பெரும் பீதி ஒருவாறு விலகத் தொடங்கியது. சிறிதளவு துணிவும் ஏற்பட்டது. அவர் உடனே தமது வாயைத் திறந்து ஓங்கிக் கூச்சலிட்டு தமது வேலைக்காரர்களின் பெயர்களை ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லிக் கூவியழைத்துப் பார்த்தார். அரைநாழிகை நேரம் கழிந்தது. ஒரு நாழிகை, இரண்டு நாழிகை நேரமும் கழிந்தது. எவரும் அவ்விடத்திற்கு வரவில்லை. பொழுது ஏற ஏற அவரது மன வேதனைகளும், தேக அவஸ்தைகளும் விஷம்போலப் பெருகிக் கொண்டே போயின. தமது குரல் வெளியில் கேட்கவில்லை ஆதலால், யாரும் தமக்கு உதவி செய்ய வரவில்லையென்பதை அவர் எளிதில் உணர்ந்து கொண்டார். தாம் பிறர்க்குச் செய்ய நினைத்த தீங்குதமக்கே வந்து வாய்த்ததை நினைக்க நினைக்க, அவரது மனம் கலங்கிக் கொதித்தது. தம்மால் அந்த நாற்காலியில் பலதடவைகளில் மாட்டி விடப்பட்ட அநந்தமான பெண்களின் தேகமும் மனதும் எவ்விதமான பாடுபட்டிருக்கும் என்பதை அவர் அப்போதே உணர்ந்தார். அவர்கள் எல்லோரும் வயிறெரியக் கதறி அழுது கெஞ்சி மன்றாடிக் கேட்டுக்கொண்டபோது தாம் சிறிதளவும் இரங்காமல் கடின மனதோடு தமது கோரிக்கை ஒன்றையே உறுதியாகக் கடைப்பிடித்த பெரும் பாவமும் பழியுமே அப்போது ஒன்றாகத் திரண்டுவந்து தம்மை அத்தகைய கொடிய