பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 49 போனதையும், தான் அவ்வாறு போகவேண்டிய பிரமேயத்தை யும் எடுத்துக் கூறினாள்.

அந்த வரலாற்றைக் கேட்ட ஜெமீந்தார், லீலாவதி திருடனு டைய வீட்டில் செய்த தந்திரங்களைக் கேட்டு, அவளது திறமைக்கு அவளை நிரம்பவும் மெச்சியதோடு, அந்த முரட்டுத் திருடன் இனி மேல் அவளிடம் வந்து, பவானியம்பாள்புரம் ஜெமீந்தார் வெந்நீர்அண்டாவில் இறந்துபோன முகாந்திரத்தை வைத்துக்கொண்டு அவளைப் பயமுறுத்த முடியாதபடி அவள் முன்யோசனையோடு செய்த காரியங்களையும் ஆமோதித்தார். ஆனால், திருடன் தன்னை மாத்திரமே தூக்கிக் கொண்டு போனான் என்று சொன்னதிலிருந்து, ஷண்முகவடிவு தமது மாளிகையிலிருந்து தப்பி இரவிலேயே எங்கேயோ போய் விட்டாளென்று ஜெமீந்தார் உடனே நிச்சயப்படுத்திக் கொண்டார். உடனே அவர்களிருவருக்கும் அது விஷயத்தில் விசனமும், கவலையும், கலக்கமும் உண்டாயின. தாங்கள் அத்தனை பாடுகள் பட்டும், காரியம் நிறைவேறும் தருணத்தில் அவள் தங்களது வலையிலிருந்து தப்பிப் போனதைப் பற்றி ஜெமீந்தார் மிகுந்த வியாகுலம் அடைந்தார். ஷண்முகவடிவு தமது மாளிகையின் அடையாளத்தைத் தெரிந்துகொண்டு, அண்டை வீட்டாரிடம் கேட்டுத் தாங்கள் இன்னார் என்பதைத் தெரிந்துகொண்டு தாங்கள் செய்த கொடுமைகளை எல்லாம் எப்படியும் வெளியிட்டு விடுவாள் என்ற நிச்சயம் ஏற்பட்டது. ஆகையால், அதைப்பற்றி மாத்திரம் அவர்கள் இருவரும் மிகுந்த கவலையும் கலக்கமும் அடைந்தவராய் இருந்ததன்றி, ஷண்முக வடிவு அந்த ஊரிலேயே எவ்விடத்திலாவது இருப்பாள் ஆதலால், தாம் ஆட்களை விட்டுத் தேடச் செய்து எப்படியாவது அவளை மறுபடி அழைத்துக் கொண்டு வரவேண்டுமென்றும், அவள் ஒருகால் அவ்விடத்தை விட்டுத் திரும்பித் திருவாரூருக்குப் போயிருந்தாலும், அவ்விடத்திற் காகிலும் தமது ஆட்களை அனுப்பி, பலாத்காரம் செய்து