பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பூர்ணசந்திரோதயம் - 5 உட்கார்ந்திருந்தார். லீலாவதி அன்றைய தினம் பொழுது விடிந்தது முதல் அந்த அகாலவேளை வரையில் தண்ணீரும் அருந்தாமல் வாட்டமடைந்திருந்தது அன்றி, இறந்துபோன ஜெமீந்தாரின் உருவப் படத்தைக் கண்டு அவரது மரணத்தைப் பற்றி அளவற்ற துயரமடைந்து கலங்கி உருகி அழுதாள். ஆதலால், அவளது நிலைமை முற்றிலும் பரிதாபகரமாக இருந்தது. அவளைப் பார்க்கப் பார்க்க, நீலமேகம் பிள்ளை யினது துரயம் முன்னிலும் ஆயிரமடங்கு பெருகியது. தனது தந்தை கேவலம் சாதாரணமான ஒரு ஸ்திரீயை நாடி அலைந்து திரிந்து அபாயத்திற்கு ஆளாகிவிட்டாரே என்று அவர் அதுவரையில் நினைத்துத் தமது தந்தையைப் பற்றி இழிவாக எண்ணியிருந்த அபிப்பிராயம் சிறிதளவு மாறியது. அவ்வளவு அபாரமான கட்டழகும் யெளவனமும் வாய்ந்த அப்ஸர ஸ்திரீபோல இருக்கும் அந்த வடிவழகி அந்தரங்கமான காதலும் பிரேமையும் கொண்டு நேசிக்கையில் அவளது விஷயத்தில் தமது தந்தை தமது மதியை இழந்து அவள்மீது மோகம் கொண்டது மன்னிக்கத் தக்கதே என்று எண்ணம் நீலமேகம் - பிள்ளையின் மனதில் பட்டது. அப்படிப்பட்ட சிலாக்கியமான பெண்ணைக் கண்டு, உலகத்தை நீத்த தவசிகள் கூட இச்சை கொள்வார். ஆதலால், தமது தந்தை அவளை நாடிநூலேணியின் வழியாக மேன்மாடத்துக்குச் சென்றது சர்வ சாதாரணமான செய்கை என்றே அவர் மதித்து, அவளையும், தனது தந்தையின் உருவத்தையும் மாறி மாறிப் பார்த்தவராயிருந்தார்.

லீலாவதி மேலும் பேசத் தொடங்கி, ‘நாங்கள் மைசூரி லிருந்து திரும்பிவந்து மாரியம்மன் கோவிலில் ஒரு ரகசியமான இடத்தில் குடியிருந்தோம். அப்போது என் புருஷர் வெண்ணாற்றங்கரையில் நாங்கள் அதற்குமுன் வசித்து வந்த பங்களாவிற்கு ஏதோ ஒரு காரணமாகப் போனவர்அவ்விடத்தில் வெந்நீர் அண்டாவிற்குள் இறந்துகிடந்த உங்கள் தகப்பனா ருடைய பிரேதத்தைப் பார்த்து அவருடைய அடையாளத்தைக் கண்டுபிடித்துக்கொண்டதன்றி, எனக்கும் இவருக்கும் சிநேகம்