பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பூர்ணசந்திரோதயம் - 5 இருக்கிறார். அவர் திரும்பி வருவதற்குள் நான் கிழவியாகி விடுவேன். அல்லது, அவரே சிறைச்சாலைக்குள் இறந்து போனாலும் போகலாம். அல்லது, அவர் சுகமாகத் திரும்பி வந்தாலும், அப்படிப்பட்ட இழிவை அடைந்த மனிதரோடு நான் இனி மனமொத்து வாழ்ந்து சந்தோஷமடைய முடியுமா? ஒருநாளுமில்லை. இவ்வளவோடு நான் அழிந்து போனவள் தான். இனி நான் இந்த ஜென்மத்தைச் சுமப்பது வியர்த்தமே அன்றி வேறல்ல. இதனால் எனக்குப் பலவிதமான அபாயமும் வியாகுலமும் உண்டாகுமென்பது நிச்சயம். இப்படிப்பட்ட அழகை நான் படைத்திருப்பதால், கேவலம் கொள்ளைக் காரனான முரட்டு மனிதன் கூட என்மேல் துராசை கொள்ள நேர்ந்ததல்லவா? அந்தத் துஷ்டன் இவ்வளவோடு என்னை விட்டுவிடவா போகிறான். அவன் எப்படியும் மறுபடியும் வந்து

என்னைப் பலவித இடர்களுக்கு ஆளாக்குவது என்பது நிச்சயம். என் பெரிய தந்தையோ, புனிதவதிகளான பெண்களைக் கொணர்ந்து வைத்துக் கொண்டு பலாத்காரம் செய்கிறார்; அப்படிப்பட்ட அக்கிரமச் செய்கைகளுக்கு நானும் உதவியாக இருக்கவேண்டியிருக்கிறது. இல்லையானால் நான் அவருடைய கோபத்துக்குப் பாத்திரமாக வேண்டும். ஆகா என்னுடைய ஜென்மமும் ஒரு ஜென்மமா? நான் இந்த ஜென்மத்தை எப்படி விட்டு ஒழிக்கப் போகிறேன். ஐயோ! பாழுந் தெய்வமே உன் கோவில் இடியாதா? என் வயிறெரிகிறது, உனக்குத் தெரியாமல் போக, நீ அந்தகனாய்ப் போனாயா?” என்று லீலாவதி பித்தம் பிடித்தவள்போலத் தனக்குள் பலவாறு எண்ணமிட்டு ஆத்திரம் அடைந்தவளாய் நிலைக் கண்ணாடியில் தோன்றிய தனது சுந்தர வடிவத்தை அருவருப்போடு பார்க்க, கண்ணாடிக்குள் திடீரென்று இன்னொரு பயங்கரமான ரூபம் தென்பட்டது. பிரம்மாண்டமான உடம்பும், பரம விகாரமானமுகமும் உடைய ஒர் ஆண்வடிவம் கண்ணாடிக்குள் காணப்படவே, அது தன் மனதின் பிராந்தியினால் ஏற்பட்ட பொய்த் தோற்றமென்ற எண்ணம் மின்னல் தோன்றி மறைவது போல அவளது மனதில்